தமிழகம்-கேரளத்துக்கு உச்ச நீதிமன்றம் யோசனை
டெல்லி:
முல்லைப் பெரியாறு அணை உயரத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசும் கேரள அரசும் பேச்சுவார்த்தைநடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்துமாறு தமிழக அரசு கோரி வருகிறது. ஆனால், அதை 136அடியாகவே வைத்திருக்க வேண்டும் என கேரளம் கூறுகிறது.இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கேரளம் மதிக்கவில்லை. மாறாக அந்த உத்தரவைசெயலிழக்கச் செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து தமிழகத்தின் முதுகில் குத்தியது.
இந் நிலையில் இந்த விவகாரம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சபர்வால் தலைமையிலான டிவிசன்பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய கேரள அரசின் வழக்கறிஞர், இந்தப்பிரச்சனையை பேசித் தீர்க்கலாம் என கேரள முதல்வர் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்றார்.
இதையடுத்து அணை உயரத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசும் கேரள அரசும் பேச்சுவார்த்தை நடத்திசுமூகத் தீர்வு காண முயல வேண்டும் என நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில்,
பேச்சுவார்த்தைக்கான அணுகுமுறை இல்லாதவரை இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க முடியாது. இது போன்றபிரச்சனைகளில் நீதிமன்றம் கடைசி கட்டமாகத் தான் தலையிட வேண்டும். இரு மாநில அரசுகளும்தங்களுக்குள்ளாகவோ அல்லது மத்திய அரசின மூலமோ பேசி சுமூகமாக தீர்வு காண வேண்டும் என்றனர்.
முன்னதாக பேசிய தமிழக அரசின் வழக்கறிஞர் பராசரன், கேரள அரசு கொண்டு வந்துள்ள சட்டம் காரணமாகஅணையின் பழுதுபார்ப்புப் பணிகளைக் கூட தமிழக அரசால் மேற்கொள்ள முடியவில்லை என்றார்.
பிரதமர் தீர்வு காணாவிட்டால்...
இதற்கிடையே முல்லை பெரியார் பிரச்சனை குறித்து பிரதமர் உரிய தீர்வு காணாவிட்டால் தமிழ்நாடுஏற்படுத்தியுள்ள முல்லை பெரியாறு ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என கேரள நீர்பாசன அமைச்சர்பிரேமசந்திரன் கூறியுள்ளார்.
கேரள சட்டசபையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து பிரேமசந்திரன் கூறியதாவது,
முல்லை பெரியாறு பிரச்சனை தற்போது பிரதமர் முன்னிலையில் உள்ளது. அவர் இதற்கு உரிய தீர்வுகாணாவிட்டால் தமிழ்நாடு ஏற்படுத்தியுள்ள முல்லை பெரியாறு ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.
தற்போது உள்ள சூழ்நிலையில் அணை நீர் அளவை உயர்த்த முடியாது. அணைக்கு ஆபத்து ஏற்படவதைஅனுமதிக்க மாட்டோம். பிரதமர் இரு தரப்பினரும் ஏற்கும் முடிவை எடுப்பார் என எதிர் பார்க்கிறோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications