போயஸ் கார்டனில் சிக்கிய போட்டோகிராபர்கள்
சென்னை:
சென்னை மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட சீட் கிடைக்காதவர்கள்அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்களை படம் எடுத்த இரு பத்திரிக்கை கேமராமேன்களையும் நிருபர்களையும்அதிமுகவினர் தாக்கினர். அவர்களை விரட்டி விரட்டி அடித்ததில் இருகேமராமேன்களின் கேமராக்கள் உடைந்தன.சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட சீட்கிடைக்காதவர்கள் பலர் தங்கள் ஆதரவாளர்களோடு போயஸ் தோட்டத்தில் உள்ளஜெயலலிதாவின் வீட்டை முற்றுகையிட்டனர்.
இந்த தகவல் அறிந்ததும் நிருபர்களும் பத்திரிகை போட்டோகிராபர்களும் அங்குசென்றனர்.
அதிமுகவினர் போராட்டம் நடத்தியதை கேமராமேன்கள் படம் எடுத்தனர். இதனால்ஆத்திரமடைந்த அதிமுகவினர் நிருபர்களையும் கேமராமேன்களையும் தாக்கஆரம்பித்தனர்.
இதனால் அவர்கள் தப்பி ஓடினர். ஆனாலும் விடாமல் விரட்டிச் சென்று அவர்களைஅதிமுகவினர் தாக்கினர்.
இதில் யு.என்.ஐ செய்தி நிறுவனத்தின் போட்டோகிராபர் குமார், ஈநாடு தெலுங்குபத்திரிகையின் போட்டோகிராபர் மணி ஆகியோருக்கு பலமாக அடி விழுந்தது.
குமாரின் முகத்தில் குத்து விழுந்ததில் அவரது மூக்கு உடைந்தது.
இருவரின் கேமராக்களையும் அந்தக் கும்பல் பறித்தது. டிஜிட்டல் கேமராவில் இருந்தசிப்களை அந்தக் கும்பல் எடுத்துக் கொண்டது.
இதையடுத்து பிற நிருபர்கள் தலையிட்டு அவர்களை காப்பாற்றினர்.
ஜெயலலிதாவை சந்திக்கு புகார் கொடுக்க நிருபர்கள் முயன்றனர். இதற்கிடையேசம்பவம் குறித்து அறிந்த ஜெயலலிதா, செங்கோட்டையனை அனுப்பினார்.
அவர் விரைந்து வந்து நிருபர்களிடம் மன்னிப்பு கேட்டார். கேமராக்களுக்கு ஏற்பட்டசேத மதிப்பை அதிமுக கொடுத்து விடும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு தாக்குதல் நடத்திய அதிமுகவினரை எச்சரித்து அங்கிருந்துகலைந்து போகச் செய்தார் செங்கோட்டையன்.
இந் நிலையில் பத்திரிக்கையாளர்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக அரும்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுகபிரமுகர் குமார் (33), அயோத்தியாகுப்பத்தைச் சேர்ந்த பூம்புகார் மகாலிங்கம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications