சிலை விவகாரம்: பணிக்கர்-ஜெயமாலா கூட்டு சதி
திருவனந்தபுரம்:
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் விக்ரகத்தை தொட்டதாக எழுந்த விவகாரத்தில் கன்னட நடிகைஜெயமாலாவும் உன்னி கிருஷ்ண பணிக்கரும் சேர்ந்து சதி செய்த விவரம் வெளியாகியுள்ளது.
சபரிமலை கோவில் தந்திரி குடும்பத்தினரின் பெயரைக் கெடுக்க, உன்னிகிருஷ்ண பணிக்கரும் ஜெயமாலாவும்சேர்ந்த நாடகம் ஆடியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்த கோவிலில் கடந்த ஜூன் மாதம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடரானஉன்னிகிருஷ்ண பணிக்கர் தேவபிரஸ்னம் (ஜோதிட ஆய்வு) பார்த்தார்.
அப்போது சபரிமலை கோவிலில் பல தவறுகள் நடந்துள்ளன. இளம் பெண் ஒருவர் சுவாமியின் விக்ரகத்தைதொட்டு விட்டார். இதனால், ஐயப்பன் மிகவும் கோபமாக இருக்கிறார். இந்த களங்கத்தைப் போக்க, பரிகாரபூஜைகள் நடத்தப்பட வேண்டும் என்றார்.
இது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், சுவாமி சிலையை பெண் யாரும்தொட்டிருக்க வாய்ப்பே இல்லை என கோவிலின் பூசாரிகளான தந்திரிகள் கூறினர்.
இந் நிலையில் கன்னட நடிகை ஜெயமாலா, கோவில் நிர்வாகத்துக்கு ஒரு பேக்ஸ் அனுப்பினார். அதில், 18ஆண்டுகளுக்கு முன் ஐயப்பன் விக்ரகத்தை தொட்ட இளம் பெண் நான் தான் என்று குறிப்பிட்டிருந்தார்.
பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய ஜெயமாலா, 1987ம் ஆண்டு என் கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டபோதுஐயப்பனிடம் வேண்டிக் கொண்டேன். சபரிமலைக்கும் கணவருடன் சென்றேன். அப்போது, எனக்கு 27 வயது.கோவிலுக்குள் இளம் பெண்கள் செல்லக் கூடாது என்பது எனக்குத் தெரியாது.
கூட்ட நெரிசலில் நான் கோவிலுக்குள் தள்ளப்பட்டேன். அங்கு இருந்த மூல விக்ரகத்தை தொட்டு வணங்கினேன்.மேலும், அங்கிருந்த தந்திரிகள் எனக்கு பிரசாதம் கொடுத்தனர். உடனே அந்த இடத்தை விட்டு வெளியே வந்துவிட்டேன் என்றார்.
ஆனால், இதை தந்திரிகளும் கோவில் நிர்வாகமான தேவசம் போர்டும் மறுத்தனர்.
இதையடுத்து போலீஸ் விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டது. தனிப்படை போலீசார் ஜெயமாலாவிடமும்,தந்திரி, பணிக்கரிடமும் விசாரணை நடத்தி வந்தனர்.
இப்போது இந்த விசாரணையின் விவரம் வெளியில் வந்துள்ளது.
அதில், தந்திரியையும் அவரது குடும்பத்தினரின் பெயரையும் கெடுக்க, உன்னிகிருஷ்ண பணிக்கர் மற்றும் நடிகைஜெயமாலா ஆகியோர் கூட்டு சதித் திட்டம் தீட்டியிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
ஜெயமாலாவுக்கு உன்னிகிருஷ்ண பணிக்கரும் ஏற்கனவே பழக்கமானவர்கள். ஜெயமாலா வீட்டில் பணிக்கர்பூஜையும் நடத்தியுள்ளார்.
பணிக்கர் பிரஸ்னம் பார்த்த உடனேயே ஐயப்பன் சிலையை நான் தான் தொட்டேன் என்று ஜெயமாலா பேக்ஸ்அனுப்பியதன் பின்னணியில் சதித் திட்டம் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசாரின் இந்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இதையடுத்து பணிக்கர் மற்றும் ஜெயமாலா மீது கேரள அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றஎதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications