முஷாரப் சுய சரிதை- புருடாவும் பொய்களும்
டெல்லி:
ஆக்ராவில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த மாநாடு தோல்வியில் முடிந்ததற்குபாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபே காரணம் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய்கூறியுள்ளார்.
காஷ்மீர் வன்முறைகளை பயங்கரவாதம் என அவர் ஏற்க மறுத்ததும் அதை ஒருசுதந்திர போர் என்று கூறியதுமே பேச்சு தோல்வியடைந்ததற்குக் காரணம் எனவாஜ்பாய் கூறியுள்ளார்.சமீபத்தில் முஷாரப் தனது சுயசரிதயை எழுதியுள்ளார். "இன் தி லைன் ஆப் பையர்என்ற அந்த புத்தகத்தில் செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா துணைஅமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் பாகிஸ்தானை மிரட்டியது குறித்தும், நவாஸ் ஷெரீபுக்குஎதிராக தான் நடத்திய ராணுவ புரட்சி குறித்தும், கார்கில் போர் குறித்தும், ஆக்ராபேச்சுவார்த்தைகள் குறித்தும், இந்திய-பாகிஸ்தான் அணு ஆயுத சோதனைகள்குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புத்தகம் நேற்று தான் விற்பனைக்கு வந்தது. ஆனாலும் அதில் உள்ளதகவல்கள் கடந்த ஒரு வாராமாகவே வெளியில் வந்து கொண்டிருந்தன. இந்தசுயசரிதையில் பாதிக்குப் பாதி பொய்யும் புருடாவுமாகவே உள்ளது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் அணு ஆயுத திட்டங்களை இந்தியா காப்பியடிப்பதாக பச்சையாகபுளுகியுள்ளார் முஷாரப்.
அதே போல பாகிஸ்தானை தான் மிரட்டியதாகக் கூறியதை ஆர்மிடேஜ் வன்மையாகமறுத்துள்ளார். தனது புத்தக விற்பனைக்காகவும் பரபரப்புக்காகவும் முஷாரப் கதைவிட்டுள்ளதாக ஆர்மிடேஜ் கூறியுள்ளார்.
மேலும் கார்கில் போர் நடந்தபோது ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், அதில்பாகிஸ்தான் ராணுவம் சம்பந்தப்படவே இல்லை என்றும், போராளிக் குழுவினர் தான்அதை நடத்துவதாகவும் கூறியிருந்தார். ஆனால், இப்போது தனது புத்தகத்தில் இந்தத்தாக்குதலில் ராணுவமும் போராளிகளும் இணைந்து பாடம் புகட்டினோம் என்றரீதியில் எழுதியிருக்கிறார்.
ஆக்ரா பேச்சுவார்த்தை முடிந்த பின் கூட்டறிக்கை வெளியிடாமல் போனது தனக்கும்,வாஜ்பாய்க்கும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் தனது புத்தகத்தில் முஷாரப்கூறியுள்ளார்.
இது குறித்து வாஜ்பாய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முஷாரப்பின் புத்தகத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால், ஆக்ரா மாநாடுபேச்சு தோல்வி குறித்து புத்தகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் எனக்கு ஆச்சரியம்தருகின்றன. ஆக்ராவில் முஷாரபையோ என்னையோ யாரும்அவமானப்படுத்தவில்லை.
அந்த பேச்சுவார்த்தையின்போது அவர் தனது நிலையை மாற்றிக் கொள்ளவேஇல்லை. காஷ்மீரில் நடக்கும் வன்முறையை பயங்கரவாதம் என அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். அங்குள்ள மக்கள் நடத்தும் சுதந்திர போர் என்றார். இதனால் தான்பேச்சு தோல்வியில் முடிந்தது என்று கூறியுள்ளார் வாஜ்பாய்.


Click it and Unblock the Notifications
