தலைவரை சிறை வைத்த காங் தொண்டர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலைஅக்கட்சித் தலைமை வெளியிடாததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சத்தியமூர்த்திபவனில் நூற்றுக்கணக்கான காங்கிரஸார், சட்டசபை காங்கிரஸ் தலைவர்சுதர்சனைத்தை அலுவலகத்திலேயே சிறை வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் முடிந்து, வேட்பு மனுபரிசீலனையும் முடிந்து விட்டது. நாளை மாலை 3 மணிக்குள் வேட்பு மனுக்களைவாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் அனைத்தும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துஅவர்கள் வேட்பு மனுக்களுக்கு தாக்கல் செய்து விட்டனர். ஆனால் காங்கிரஸ்கட்சியில் மட்டும் இது தலைகீழாக உள்ளது.

இவர்கள்தான் வேட்பாளர்கள் என யாரையும் காங்கிரஸ் கட்சி இதுவரைஅறிவிக்கவில்லை. அப்படிச் செய்தால் பெரிய அடிதடி, கலவரம் நடக்கும் என்றகோஷ்டிப் பயம்தான் இதற்கு முக்கியக் காரணம்.

இதனால் யார் வேட்பாளர் என்பது தெரியாமல் காங்கிரஸ் கட்சியினர் குழம்பிப்போயுள்ளனர். சீட் கிடைக்கும் என்று நினைத்து தமிழகம் முழுவதும் பல்வேறுகோஷ்டிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான காங்கிரஸார் வேட்பு மனுக்களை தாக்கல்செய்துள்ளனர்.

தற்போது கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்ற கடிதத்தைப் பெற சென்னைக்குஇவர்கள் படையெடுத்துள்ளனர்.

நேற்று காலை முதல் தலைமை அலுவலகமான சத்தியர்த்தி பவனில் இவர்கள்குவிந்துள்ளனர். ஆனால் நேற்று தலைவர்கள் யாரையும் கட்சி அலுவலகம் பக்கம்பார்க்க முடியவில்லை.

வந்தால் கட்சியினரிடம் தர்ம அடி வாங்க வேண்டிய சூழல் உள்ளதால் தலைவர்கள்யாரும் கட்சி அலுவலகம் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.

இன்று காலையும் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் போட்டியிட வேட்பு மனுசெய்தவர்களும் சத்தியமீர்த்தி பவனில் குவிந்தனர். ஆனால் பிற்பகல் 12 மணி வரைஒரு தலையையும் காணவில்லை.

இந் நிலையில் தெரியாத்தனமாக சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் (இவர்வாசன் கோஷ்டிக்காரர்) 12.30 மணியளவில் சத்தியமூர்த்தி பவன் பக்கம் வந்துவிட்டார்.

அவ்வளவுதான் கடும் கடுப்புடன் காத்திருந்த வேட்பாளர்கள், தொண்டர்கள் அத்தனைபேரும் சுதர்சனத்தை சூழ்ந்து கொண்டு அதிகாரப்பூர்வ கடிதம் எங்கே, வேட்பாளர்கள்யார் என்று கோபமாக கேட்டு கோஷமிட்டனர்.

திடீரென்று சுற்றுச் சூழ்ந்து கோஷம் போட்டதால், பயந்து போன சுதர்சனம், ஒன்றுமேதெரியாதது மாதிரி என்ன விஷயம் என்று விசாரித்தார்.

கோஷம் போட்டவர்கள் சுதர்சனத்திடம் விளக்கம் சொன்ன பிறகு, சரி பொறுமையாகஇருங்கள், தலைவரிடம் விசாரிக்கிறேன் என்று கூறி விட்டு உள்ளே போனார்.

சுதர்சனம் வருவார், நல்ல செய்தியாக சொல்வார் என வேட்பாளர்களும்காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரம் கழித்து வெளியே வந்த சுதர்சனம், அப்படியேவீட்டுக்குக் கிளம்புவதற்காக காரில் ஏறப் போனார்.

இதைப் பார்த்ததும் கொந்தளித்த காங்கிரஸார் ஓடிச் சென்று சுதர்சனத்தை வெளியேபோக விடாமல் தடுத்து முற்றுகையிட்டனர். இதையடுத்து வாசன் கோஷ்டியினர் ஓடிவந்து அவரை மீட்டு மீண்டும் அலுவலகத்திற்குள் பத்திரமாகக் கொண்டு சென்றனர்.

இதனால் வெளியே போக முடியாமல் சிக்கிய சுதர்சனம், அலுவலகத்தில் இருந்தபடிகாங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்களை தொடர்பு கொண்டு பேசமுயன்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக யாரும் கிடைக்கவில்லை.

வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவர் என்பதால் தொண்டர்களிடம் சுதர்சனம் சிக்கட்டும்என்று நினைத்தாரோ என்னவோ கிருஷ்ணசாமி போன் லைனிலேயே வரவில்லை.

இதனால் நீண்ட நேரமாக அலுவலகத்திலேயே அடைபட்டிருந்தார் சுதர்சனம். தகவல்அறிந்த வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் சுதர்சனத்தை ரெஸ்க்யூ செய்வதற்காகபெரும் எண்ணிக்கையில் சத்தியமூர்த்தி பவனில் குவிந்தனர்.

ஓரளவுக்கு பெரும் எண்ணிக்கையில் வாசனின் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வெளியேகுவிந்துவிட்டதையடுத்து வெளியே வந்தார் சுதர்சனம்.

அங்கு கூடியிருந்த பிற கோஷ்டி தொண்டர்களையும் வேட்பு மனு தாக்கல்செய்தவர்களையும் சந்தித்த சுதர்சனம், விரைவில் நல்ல தகவல் தரப்படும் என்றுசமாதானப்படுத்தினார் சுதர்சனம்.

அதன் பின்னரே சுதர்சனத்தால் அங்கிருந்து போக முடிந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+