வாக்காளர்களை மயக்க குடிநீரில் வசிய மருந்து?
கடலூர்:
கடலூர் மாவட்டம் பூதம்பாடி கிராமத்தில் வாக்காளர்களை மயக்க விபூதியுடன் வசிய மருந்தைக் கலந்து அதைகுடிநீரில் கலந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் பூதம்பாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் விஜயாஎன்பவரும், அதிமுக சார்பில் மணிமேகலை என்பவரும் போட்டியிடுகின்றனர்.இரு கட்சியினரும் வாக்காளர்களைக் கவர தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இதில் ஒரு அணியினர்,மக்களை மயக்கி வாக்குகளைப் பெற மந்திரிவாதியின் உதவியைக் கோரியுள்ளதாக பீதி பரவியுள்ளது.
இந்த அணியினர் அங்குள்ள மேல் நிலைக் குடிநீர் தொட்டியில் வசிய மருந்து கலக்கப்பட்ட விபூதியை தண்ணீரில்கலந்து விட்டதாகவும் பரபரப்பு கிளம்பியுள்ளது.
இதை உறுதிப்படுத்துவது போல நேற்று காலை இங்குள்ள குடிநீர்க் குழாய்களில் பொதுமக்கள் தண்ணீர்பிடித்தபோது, தண்ணீர் வித்தியாசமான வண்ணத்தில் இருப்பதையும், அதில் விபூதி வாசம் வருவதையும் பார்த்துபயந்து போயினர்.
மக்கள் மனதை மாற்றி வாக்குகளைப் பெற வசிய மருந்தை கலந்து விட்டதாக எதிர் அணியைச் சேர்ந்தவர்கள்குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. தண்ணீரை ஒருபாட்டிலில் பிடித்து போலீஸாரிடம் கொடுத்தனர்.
சம்பந்தப்பட்ட தொட்டியிலிருந்து தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி விட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து தண்ணீர் முழுவதும் திறந்து விடப்பட்டது. பின்னர் பிளீச்சிங் பவுடர் அடித்து தொட்டியைசுத்தப்படுத்திய பின்னர் மீண்டும் தண்ணீர் நிரப்பப்பட்டது.
இந்த சம்பவம் பூதம்பாடி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications