தமிழகத்துக்கு அமெரிக்க தூதர் பாராட்டு
சென்னை:
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்ட், பின்லாந்து தூதர் அஸ்கோ நியூமெனின்ஆகியோர் சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டில் இச் சந்திப்பு நடந்தது. அப்போதுசென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் கான்சல் ஜெனரல் டேவிட்ஹூப்பர், தலைமைச் செயலர் திரிபாதி ஆகியோரும் உடனிருந்தனர்.இச் சந்திப்புக்கு பின் டேவிட் முல்போர்டு நிருபர்களிடம் கூறுகையில்,
இந்திய அரசியலின் மிக மூத்த தலைவர் என்பதாலும், மிக மதிப்புக்குரிய தலைவர்என்பதாலும் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக மட்டுமல்ல, நட்புணர்வோடுசந்தித்துப் பேசினேன்.
தமிழக அரசு நிர்வாகம் மிகச் சிறந்த முறையில் செயல்படுகிறது. அதற்காகமுதல்வருக்கு வாழ்த்தும் அவர் நீண்ட காலம் வாழ பிரார்த்தனைகளையும்தெரிவித்தேன்.
தமிழகத்தில் தொழில் தொடங்வதற்கான மிக நல்ல சூழ்நிலை நிலவுகிறது. இங்குஅடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மிகச் சிறப்பாக உள்ளன. அதே போல சிறந்ததிறன் கொண்ட, கடுமையாக உழைக்கும் பணியாளர்களும் தமிழகத்தில் உள்ளனர்.
இதனால் தான் அமெரிக்காவின் பெரும்பாலான முதலீடுகள் இந்தியாவில், குறிப்பாகதமிழகத்தை வந்து அடைந்தவண்ணம் உள்ளது. மேலும் முதலீட்டைப் பெருக்குவதுகுறித்து முதல்வருடன் பேசினேன்.
மேலும் இலங்கை பிரச்னை குறித்தும் முதல்வருடன் விவாதித்தேன். இலங்கைபிரச்னையில் அமைதி பேச்சுவார்த்தை தொடர வேண்டும். அங்கு அமைதி திரும்பும்என்று அமெரிக்கா நம்புகிறது. இலங்கை சூழலை அமெரிக்கா தொடர்ந்துஉன்னிப்பாக கவனித்து வருகிறது.
சென்னை அமெரிக்க துணை தூதரகத்துக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம்வந்ததும் போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. போலீசார் உடனடியாக செயல்பட்டுஉரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அவர்களுக்கு நன்றி என்றார்முல்போர்ட்.
பின்லாந்து தூதர் சந்திப்பு:
இந் நிலையில் இந்தியாவுக்கான பின்லாந்து தூதர் அஸ்கோ நியூமெனின் இன்று கருணாநிதியை சநித்துப் பேசினார். தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தச்சந்திப்பின்போது பின்லாந்து நிறுவனமான நோக்கியாவின் செயல்பாடுகளை தமிழகத்தில் விரிவுபடுத்துவது குறித்து இருவரும் பேசினர்.
ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள நோக்கியா தொழிற்சாலை விரிவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தொழில்துறைக்கு சாதகமான சூழல் நிலவுவதாகக் கூறிய அஸ்கோ, மேலும் அதிகமான பின்லாந்து முதலீடுகள் தமிழகத்துக்குவரவுள்ளதாகவும் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications