சங்கம் அமைக்கும் சுயேச்சை வேட்பாளர்கள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள் இணைந்து புதியசங்கம் ஒன்றை ஆரம்பிக்கின்றனர்.

திருச்சியில் இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் திருச்சிமாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் பல்வேறு சுயேச்சை வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். சுயேச்சை வேட்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தைஆரம்பிக்க இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

25க்கும் மேற்பட்ட சுயேச்சைகள் இதில் கலந்து கொண்டனர். இன்று இந்த சங்கம்தொடங்கி வைக்கப்படுகிறது. படித்தவர்கள் சமுதாயப் பணிக்கு வர வேண்டும் என்றகருத்தின் அடிப்படையில்தான் இச்சங்கம் ஆரம்பிக்கப்படுவதாக அவர்கள்தெரிவித்தனர்.

மாநகராட்சி தேர்தலுக்குப் பின்னர் திருச்சி மேயர் பதவிக்கு சுயேச்சைகளின் ஆதரவுஇல்லாமல் யாரும் வர முடியாது. அந்த நிலையில், சுயேச்சை வேட்பாளர்கள் எப்படிசெயல்பட வேண்டும் என்பது குறித்து இந்த சங்கம் திட்டமிட்டு செயல்படும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து விட்டு சங்கதொடக்கம் குறித்த அறிவிப்பை சுயேச்சைகள் வெளியிடவுள்ளனர். திருச்சிமாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வார்டிலிருந்தும்தலா ஒரு வேட்பாளர் சங்கத்தில் சேர்க்கப்படவுள்ளார்.

பின்னர் சங்க உறுப்பினராக உள்ள சுயேச்சை வேட்பாளரை ஆதரித்து மற்றஉறுப்பினர்கள் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர்கள்தான் மேயர், துணை மேயர், நகராட்சித்தலைவர்களை தேர்ந்தெடுக்கவுள்ளனர்.

எனவே சுயேச்சை கவுன்சிலர்களுக்கும் திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில்சுயேச்சை வேட்பாளர்கள் இணைந்து திருச்சியில் தங்கம் தொடங்கவிருப்பதுமுக்கியத்துவம் பெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+