பாக். உறவை துண்டிக்க வேண்டும்: பாஜக
சண்டிகர்:
மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுப்பிரிவுக்கு தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளதால், அந் நாட்டுடனான உறவைதுண்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என பாஜககோரிக்கை விடுத்துள்ளது.
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சண்டீகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,மும்பை தொடர் குண்டு வெடிப்பில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்குதொடர்பு இருப்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
உடனடியாக பாகிஸ்தான தூதரை வரவழைத்து பாகிஸ்தானுடனான தூதரக உறவுகளைஇந்தியா மறு பரிசீலனை செய்யப் போகிறது என்று மத்திய அரசு தெரிவிக்கவேண்டும். பாகிஸ்தானை கடுமையாக கண்டிக்க வேண்டும்.
பாகிஸ்தானுக்கு எதிராகவும், அதன் தீவிரவாத பரப்பு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்குஎதிராகவும் தூதரக அளவில் இந்தியா நிடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
பாகிஸ்தானுடனான அமைதி நடவடிக்கைகளையும் இந்திய அரசு உடனடியாக நிறுத்தவேண்டும். நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி இந்த விஷயம் குறித்து விவாதிக்கவேண்டும்.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கி அழிக்க வேண்டும் என்றார் சிங்.












Click it and Unblock the Notifications