கர்நாடகத்தில் பந்த்-வெறிச்சோடியது பெங்களூர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

பெல்காம் மாவட்டத்தை மகாராஷ்டிரத்துடன் இணைக்கக் கூடாது என்று வலியுறுத்தி இன்று கர்நாடகத்தில் முழுஅளவில் பந்த் நடந்தது.

கன்னட சளுவாளி கட்சி, கன்னட ரக்ஷனே வேதிகே உள்ளிட்ட பல்வேறு கன்னட அமைப்புகள் அழைப்புவிடுத்த இந்த பந்த் காரணமாக இன்று காலை முதல் சாலைகள் வெறிச்சோடின. சாப்ட்வேர் நிறுவனங்கள், பிபிஓ,கால்சென்டர்கள் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்குவிடுமுறை மூடப்பட்டுவிட்டன.

பெங்களூரில் மாநகர போக்குவரத்து பஸ்கள் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டன.ஆட்டோக்கள், வேனகள், லாரிகள் இயங்கவில்லை.

கன்னடம் தவிர்த்த பிற மொழி தொலைக்காட்சிகளின் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டன.இதனால் டிடி கன்னடா, உதயா டிவி, ஈ டிவி கன்னடா ஆகிய சேனல்கள் மட்டுமே ஒளிபரப்பாயின. தமிழ்,தெலுங்கு, ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பிற மொழி சேனல்கள் ஒளிபரப் நிறுத்தப்பட்டுவிட்டது.

திரையரங்குகள், வர்த்தக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. சாலைகளில் மிகக் குறைவானஎண்ணிக்கையிலேயே வாகனங்கள் இயங்கின. இதனால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

அதேபோல தமிழகத்திலிருந்து கர்நாடகம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இன்று காலை முதல் ஓசூரோடுநிறுத்தப்பட்டுவிட்டன. இதேபோல பெங்களூரிலிருந்தும் தமிழக பேருந்துகள் இன்று காலை 5 மணிக்குமுன்பாகவே புறப்பட்டுச் சென்றுவிட்டன. அதே போல தமிழக லாரிகள் அனைத்தும் ஒசூரிலேயேநிறுத்தப்பட்டுவிட்டன. இதனால் ஓசூர் எல்லைப் பகுதியில் எங்கு நோக்கினும் வாகனங்களும் மக்களுமாககூட்டம் அலை மோதியது.

தமிழகத்தில் இருந்து இன்று காலை 6 மணிக்கு மேல் பெங்களூர் வர முயன்றவர்கள், ஒசூரிலேயே முழுதினத்தையும் கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அதே நேரத்தில் விமானங்கள், ரயில்கள், ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்படவில்லை.

பந்தையொட்டி வன்முறை மூளாமல் தடுக்க தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ராஜ்பவனில்இருந்து பேரணி நடத்த முயன்ற கன்னட சாளுவளி அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட பலர்கைது செய்யப்பட்டனர்.

பெல்காம் மாவட்டத்தில் மராட்டிய கட்டியினரும் கன்னட அமைப்பினருக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள்ஏற்பட்டன. ஆனால், போலீசார் உடனடியாக தலையிட்டதால் வன்முறை தவிர்க்கப்பட்டது.

ஆங்காங்கே ரயில் மறியல் போராட்டங்களும் நடந்துள்ளன.

பெல்காம் மாவட்டத்தில் பெரும்பான்மையானவர்களாக மராட்டியர்களே வசிக்கின்றனர். இதனால் பெல்காம்மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளை மகாராஷ்டிராவுடன் சேர்க்க வேண்டும் என மகாராஷ்டிரா கோரிவருகிறது. இதுதொடர்பாக பெல்காமில் பல்வேறு வகையான போராட்டங்களும் நடந்துள்ளன.

இதை எதிர்த்து கர்நாடகத்தில் போராட்டங்கள் நடநது வந்தன. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும்இந்தப் பிரச்சினை சமீபத்தில் உச்ச கட்டத்தை எட்டியது.

இதையடுத்து பெல்காம் கர்நாடகத்திற்கு உட்பட்ட மாவட்டம்தான் என்பதை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில்கர்நாடக சட்டசபையின் விசேஷ கூட்டம் பெல்காமில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இன்று பந்த்துக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்தன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+