ஜோசப் மீது சென்னை போலீசில் லட்சுமி வழக்கு
சென்னை:
![]() |
விமானத்தில் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட கேரள முன்னாள் அமைச்சர்பி.ஜே.ஜோசப் மீது சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் மலையாள டிவிநடிகை லட்சுமி கோபகுமார் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து ஜோசப் மீதுசென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் போலீஸார் முதல் தகவல் அறிக்கையை(எப்ஐஆர்) தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் ஜோசப்பை விசாரிக்க சென்னை போலீசார் தனிப்படையையும்அமைத்துள்ளனர்.
சென்னையிலிருந்து ஆகஸ்ட் 3ம் தேதி கொச்சி சென்ற விமானத்தில் லட்சுமிகோபகுமார் பயணித்தார். அப்போது அவருக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்தமுன்னாள் அமைச்சர் ஜோசப், லட்சுமியிடம் சில்மிஷம் செய்ததாக சர்ச்சை எழுந்தது.
![]() |
இந்த பிரச்சினை குறித்து கேரள மாநில ஐஜி சந்தியா விசாரணை நடத்தி முதல்வர்அச்சுதானந்தனிடம் அறிக்கை கொடுத்தார். அதில், அமைச்சர் ஜோசப் மீதானகுற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக ஐ.ஜி. சந்தியா தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ஜோசப் பதவி விலகினார். அவர் மீது நீதி விசாரணை நடத்த கேரள அரசுமுடிவு செய்தது. இருப்பினும் நீதி விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்க காலதாமதமாகும் என லட்சுமி கோபகுமார் அதிருப்தி தெரிவித்தார்.
மேலும் ஐஜி சந்தியா சமர்பித்த விசாரணை அறிக்கையின் நகலை தனக்கு கேரளபோலீஸ் தர மறுப்பது குறித்தும் அதிருப்தி தெரிவித்திருந்தார். விசாரணையை திசைதிருப்பி ஜோசப்பை காப்பாற்ற கேரள போலீசும் அரசும் முயல்வதாக அவர்கருதுகிறார்.
இந் நிலையில் சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் உதவி கமிஷ்னர்குப்புசாமியிடம் லட்சுமி திடீரென ஒரு புகார் கொடுத்துள்ளா. அதில், அமைச்சர்ஜோசப் என்னிடம் விமானத்தில் தவறாக நடந்து கொண்டார். எனவே அவர் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
லட்சுமி கோபகுமாருடன் அவரது கணவர், பெண்ணுரிமை இயக்க வழக்கறிஞர்கள்சுதா ராமலிங்கம், அறிவுநிதி ஆகியோரும் வந்திருந்தனர்.லட்சுமியின் புகாரைப் பெற்ற போலீஸார் ஜோசப் மீது இரண்டு பிரிவுகளின் கீழ்வழக்குப் பதிவு செய்தனர். அவர் மீது இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 354(பெண்ணின் மாண்பைக் கெடுப்பது), தமிழ்நாடு பெண்கள் வதை தடுப்புச் சட்டம்ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று காலை ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜோசப் மீதுமுதல் தகவல் அறிக்கையை போலீஸார் பதிவு செய்தனர். மேலும், வழக்குவிசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி ஜோசப்புக்கு சம்மன் அனுப்பவும் முடிவுசெய்யப்பட்டது.
இந்த சம்மனை ஜோசப்பை நேரில் சந்தித்துக் கொடுப்பதற்காக இன்ஸ்பெக்டர்எழிலரசன் தலைமையிலான தனிப்படை போலீஸார் கேரளாவுக்குஅனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பந்தப்பட்ட விமானத்தில் பயணம் செய்த பிற பயணிகள், ஊழியர்கள்உள்ளிட்டோர் குறித்த விவரங்களை சென்னை போலீஸார் கிங்பிஷர் விமானநிறுவனத்திடம் கோயுள்ளனர். அவர்களின் பெயர், முகவரியை பெற்ற பின்னர்அவர்களிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
ஜோசப் மீதான குற்றச்சாட்டு நிரூபணனமானால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனைகிடைக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications