பாகிஸ்தானில் அல்-கொய்தா தலைமையகம்!!
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் வசீர்ஸ்தான் பகுதியில்தான் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின்தலைமையகமே இயங்குகிறது அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் செய்தித் தாள்தகவல் வெளியிட்டுள்ளது.
ஒசாமா பின் லேடன் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ளமலைக் குன்றுகளில் பதுங்கியிருக்கலாம் என அமெரிக்கா கருதுகிறது. இப் பகுதியில்பலமுறை அமெரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் படைகள் தாக்குதலும் நடத்தியுள்ளன.ஆனால் பின் லேடன் இருப்பிடம், அவரது நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும்இல்லை.இந் நிலையில் அல்-கொய்தா அமைப்பின் தலைமையகம் பாகிஸ்தானில் இருப்பதாகதகவல் வெளியாகியுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஈராக்குக்கானஅல்-கொய்தா அமைப்பின் தலைமை தளபதி அபு-மசால்-அல்-சர்க்காவிகொல்லப்பட்டார்.
அப்போது சர்க்காவியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு கடிதத்தில், பாகிஸ்தானின்பழங்குடியின பிராந்தியமான வசீர்ஸ்தானில்தான் அல்-கொய்தா அமைப்பின்தலைமையகம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் இப்போது இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.அந்தக் கடிதத்தை அதியா என்பவர் 2005ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி சர்க்காவிக்குஎழுதியுள்ளார். அதில் வசீர்ஸ்தானில் உள்ள அல்-கொய்தா தலைமையகத்திலிருந்துஎழுதுவதாக குறிப்பிட்டுள்ளார் அதியா.
இந்த அதியா, பின்-லேடனின் முக்கிய தளபதிகளில் ஒருவர் என்று கூறப்படுகிறது.
அதியாவின் முழுப் பெயர் அதியா அப்த் அல் ரஹ்மான். லிபியாவைச் சேர்ந்தவர். 37வயதாகும் அதியா கடந்த 1980ம் ஆண்டில் பின் லேடனின் அமைப்பில் சேர்ந்ததாகஅமெரிக்க ராணுவம் கருதுகிறது.
அதியா எழுதியுள்ள கடிதத்தில் சர்க்காவியை எச்சரிக்கும் வகையில் வாசகங்கள்உள்ளன. அக்கடிதத்தில், உங்களைப் பற்றி தலைமை சில கருத்துக்களைதெரிவித்துள்ளது. நான் இப்போது தலைமையுடன்தான் இருக்கிறேன்.
வசீர்ஸ்தானுக்கும், ஈராக்குக்கும் இடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்துவதில் சிலசிரமங்கள் உள்ளன. எனவே தாங்கள் ஒரு பிரதிநிதியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதுநல்லது.
நீங்கள் தொடர்ந்து சன்னி பிரிவு தலைவர்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையேயானஇடைவெளியை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டால் ஈராக்கின் தலைமைப்பொறுப்பிலிருந்து உங்களை அகற்ற வேண்டியிருக்கும் என தலைமைஎச்சரித்துள்ளது.
நமது சகோதரர்கள் உங்களிடம் பேசி உங்களுக்கு அறிவுரை கூறுமாறு தலைமையைகேட்டுக் கொண்டுள்ளனர். உங்களுக்கு நல்ல வழி காட்டுமாறும் என்னைக்கோரியுள்ளனர்.
நமது சகோதரர்கள் இப்போது பலவீனமாக உள்ளனர். அவர்களுக்கு பலம் கொடுக்ககடவுளை வேண்டுகிறோம். அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினைகள் விரைவில்சரியாக வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அதியா கூறியுள்ளார்.
இந்தக் கடிதத்தின் மூலம் சர்க்காவி மீது பின் லேடன் அதிருப்தியுடன் இருந்திருப்பதுதெரிய வந்துள்ளது. 15 பக்கம் கொண்ட இந்தக் கடிதத்தின் ஆங்கிலமொழிபெயர்ப்பை அமெரிக்க ராணுவம் பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் பாக்தாதின் வடக்குப் பகுதியில் அமெரிக்க விமானப்படைநடத்திய தாக்குதலில் சர்க்காவி கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
பின் லேடனும் அவனது கூட்டாளிகளும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில்தான்பதுங்கியிருக்க வேண்டும் என பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. சமீபத்தில்வசீர்ஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பழங்குடியினதலைவர் கொல்லப்பட்டார். இதனால் வசீர்ஸ்ஸ்தானில் பதட்டம் ஏற்பட்டது.
இந் நிலையில், வசீர்ஸ்தானில்தான் அல் கொய்தா அமைப்பின் தலைமையகம்உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications