பிரபுவை இழுக்க காங்கிரஸ் முயற்சி
சென்னை:
அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்துள்ள நடிகர் பிரபுவை காங்கிரஸில் சேர்க்க அக்கட்சியிலிருந்துமுயற்சிகள் தொடங்கியுள்ளன.
சமீபத்தில் சென்னையில் நடந்த சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழாவின்போது நடிகர் பிரபு அரசியலில்இறங்குவார் என்று அவரது அண்ணன் ராம்குமார் பகிரங்கமாக அறிவித்தார். இதற்குப் பதில் அளித்து பிரபுபேசுகையில், முறையான திட்டத்தோடு அரசியலில் இறங்குவோம் என்று அண்ணனையும் சேர்த்துக் கொண்டுபேசினார்.பிரபு மற்றும் ராம்குமாரின் அறிவிப்பால் சந்தோஷமடைந்துள்ள ஒரே கட்சி காங்கிரஸ்தான். சிவாஜி கணேசன்ஏற்கனவே காங்கிரஸில் இருந்தவர்.சிவாஜி காங்கிரஸில் இருந்தவரை அவரை கரிவேப்பிலை போலத்தான் காங்கிரஸ் பயன்படுத்தியது. ஆனால்சிவாஜி ரசிகர்கள், கட்சியின் அடி மட்ட வேலைகளை சிறப்பாக செய்து கட்சிக்கு பலமாக இருந்தவர்கள்.
இதை மனதில் வைத்து பிரபுவையும் காங்கிரஸுக்குள் இழுத்துக் கொள்ள அக்கட்சியில் முயற்சிகள்தொடங்கியுள்ளன. ஆனால், அவர் காங்கிரஸில் சேருவாரா அல்லது தனிக் கட்சி தொடங்குவாரா என்றுதெளிவாகவில்லை.
காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள் சிலர் பிரபுவைத் தொடர்பு கொண்டு நம்ம கட்சிக்கே வந்துவிடுங்கள் என ஓலை அனுப்ப ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் காங்கிரஸ் கட்சியில் சிவாஜி எந்த அளவுக்கு அவமானப்படுத்தப்பட்டார் என்பதை வைத்துப்பார்க்கும்போது பிரபு காங்கிரஸ் பக்கம் போவாரா என்று தெரியவில்லை.
மேலும் காங்கிரஸ் கட்சியில் தற்போது ஏகப்பட்ட தலைவர்கள், கோஷ்டிகள் உள்ளன. ஒட்டுமொத்தமாககாங்கிரஸ் கட்சிக்கு மாநிலத் தலைவர் என்று ஒருவர் இருந்தாலும் கூட, ஏதாவது ஒரு கோஷ்டித் தலைவரின் கீழ்தான் காங்கிரஸார் செயல்பட வேண்டியுள்ளது.
எனவே காங்கிரஸில் பிரபு சேர்ந்தால் எந்தத் தலைவரின் கீழ் செயல்படுவார் அல்லது அவரே புதுக் கோஷ்டியைஉருவாக்குவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications