எஸ்.டி.டி. கட்டணம் மேலும் 60% குறைகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

எஸ்.டி.டி. கட்டணத்தை 60 சதவீதம் வரை குறைக்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

தனியார் தொலைபேசிகள் மற்றும் செல்போன் சவால்களை சமாளிக்க மத்திய அரசின்பி.எஸ்.என்.எல். நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்மூலம் பி.எஸ்.என்.எல். சேவையை விட்டு விலகிப் போன பல வாடிக்கையாளர்கள்மீண்டும் பழைய போனுக்கே திரும்பி வருகின்றனர்.

தற்போது பி.எஸ்.என்.எல். தொலைபேசிகளில் எஸ்டிடி கட்டணம், 50 கிலோமீட்டர்தூரத்திற்கு மேல் நிமிடத்திற்கு ரூ. 2.40 வசூலிக்கப்படுகிறது. மேலும், ஒன் இந்தியாதிட்டத்தின் மூலம் நிமிடத்திற்கு 1 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால்இந்தத் திட்டத்திற்கு தனி வாடகை, குறைவான இலவச அழைப்புகள் ஆகிய சிலகுறைபாடுகளால் இந்தத் திட்டம் வாடிக்கையாளர்களை பெரிய அளவில்கவரவில்லை.

ஒன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்ள வாடிக்கையாளர்கள் 4 லட்சம் பேர் மட்டுமே.எனவே இந்தத் திட்டத்தில் சில கவர்ச்சிகளை சேர்க்க பி.எஸ்.என்.எல். நிறுவனம்திட்டமிட்டுள்ளது.

அதன்படி, ஒன் இந்தியா திட்டத்தின் பலன்களை சாதாரண வாடகைக் கட்டணத்திலானமற்ற வாடிக்கையாளர்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும்நிமிடத்திற்கு ரூ. 2.40 என்று உள்ள எஸ்.டி.டி. கட்டணத்தையும் 60 சதவீதம் வரைகுறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல். கட்டணத்தைக் குறைத்தால் மற்ற தனியார் தொலைபேசிநிறுவனங்களும் கட்டணத்தை குறைத்தே ஆக வேண்டும் என்பதால் இந்த செய்திதொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு உண்மையிலேயே சந்தோஷம் தரும்செய்திதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+