அமைச்சரவை கூட்டத்தில் அன்புமணி-லாலு மோதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டெங்கு காய்ச்சல் குறித்து விவாதிக்க நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் அன்புமணியைசீண்டும் வகையில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி உள்பட நாடு ழுவதும் பரவி வரும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பது தொடர்பாக மத்திய அமைச்சரவைக்கூட்டம் டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் படு கோபமாகபேசி அன்புமணிக்கு டென்ஷனை ஏற்படுத்த முயன்றார்.

அன்புமணியைப் பார்த்து இந்தியில் கோபமாக பேசிய லாலு, நாடு முழுவதும் ஒரே பரபரப்பாக இருக்கிறது.டெங்கு வேகமாக பரவி வருகிறது என்கிறார்கள். ஒன்றுமே புரியவில்லை. மக்கள் பீதி அடைந்திருகிறார்கள்.என்னதான் நடக்கிறது என்ற விவரத்தை வேகமாக சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.

இதனால் கூட்டத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் அன்புமணி லாலு பக்கம் திரும்பிக் கூட பார்க்காமல்,படு நிதானமாக டெங்கு தொடர்பான விவரங்களை அடுக்க ஆரம்பித்தார். படு தெளிவாக அவர் எடுத்துக் கூறியதகவல்களால் அமைச்சரவை உறுப்பினர்கள் சமாதானமடைந்தனர். ஆனால் லாலுதான் ஏமாந்து போனார்.

அன்புமணி பதிலுக்கு கோபமாக ரியாக்ட் செய்வார், அப்போது ஒரு பிடி பிடிக்கலாம் என காத்துக் கொண்டிருந்தலாலுவுக்கு, அன்புமணியின் நிதானமான அணுகுமுறை படு ஏமாற்றமாகி விட்டதாம்.

அமைச்சரவைக் கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது லாலு கட்சியைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித் துறைஅமைச்சர் ரகுவன்ஷி பிரசாத் செய்தியாளர்களிடம், அன்புமணியை லாலு வறுத்து விட்டார் என போட்டு விட்டுச்சென்றார். ஆனால் அது பொய் என்பதை செய்தியாளர்கள் பின்னர் புரிந்து கொண்டனர்.

அன்புமணி மீது லாலு ஆத்திரம் காட்டியதற்கு ராமதாஸ் சமீபத்தில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடுவிவகாரத்தில் லாலுவை கடுமையாக விமர்சித்திருந்தார். அந்த கோபத்தில்தான் ராமதாஸ் மகன் மீது லாலுபாய்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

லாலுவை மாட்டுக்கார வேலன் என்று தாக்கினார் ராமதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் சாலையோர உணவகங்கள் தொடர்பான ஆய்வறிக்கையை அன்புமணி வெளியிட்டார். அப்போதுசெய்தியாளர்கள் சிலர், சாலையோர உணவகங்கள் மோசமாக உள்ளதாக கூறுகிறீர்கள். ஆனால் ரயில்களில்உணவு வங்கும் பெட்டியில் (பேன்ட்ரி கார்) மிக மோசமாவும், தூய்மையின்றியும், பராமரிக்கப்படுகின்றன.இதுகுறித்து நீங்கள் ஏன் பேசவில்லை. ரயில்வே அமைச்சர் லாலுவிடம் இதுகுறித்து பேசுவீர்களா என்றுகேட்டனர்.

இதற்கு அன்புமணி நிச்சயமாக லாலு பிரசாத்திடம் இதுகுறித்து கேட்பேன் என்று கூறியிருந்தார். இதுவும்லாலுவுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவேதான் அமைச்சரவைக் கூட்டத்தில்அன்புமணியைப் பார்த்து கோபமாக கேட்டுள்ளார் லாலு. ஆனால் அன்புமணி அளித்த பதில் லாலுவை அமுக்கிவிட்டது.

அன்புமணி மீது கேரள முதல்வர் பாய்ச்சல்:

இதற்கிடையே, சிக்குன்குனியாவுக்கு யாருமே சாகவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணிராமதாஸ் கூறியிருப்பதற்கு கேரள முதல்வர் அச்சுதானந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் சிக்குன்குனியா படு வேகமாக பரவி வருகிறது. அங்குள்ள பெரும்பாலான மாவட்டங்களில்சிக்குன்குனியா பாதிப்பு கடுமையாக உள்ளது. குறிப்பாக ஆலப்புழா மாவட்டத்தில்தான் அதிக அளவிலான பேர்உயிரிழந்துள்ளனர்.

இந்தப் பிரச்சினை கேரள சட்டசபையில் எதிரொலித்தது. கேரள காங்கிரஸ் தலைவரும், முன்னாள்அமைச்சருமான கே.எம்.மணி இதுகுறித்து கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த முதல்வர் அச்சுதானந்தன், சிக்குன்குனியாவுக்கு யாரும் பலியாகவில்லை என்று அன்புமணி கூறியதற்கு கண்டனம் தெரிவித்தார்.

கேரளாவில் சிக்குன் குனியா நிலை குறித்து அமைச்சருக்கு ஒன்றும் தெரியவில்லை. கேரள அரசிடமிருந்து எந்ததகவலையும் கேட்டுப் பெறாமலேயே அமைச்சர் டெல்லியில் இவ்வாறு பேசியிருக்கிறார்.

அவர் எதிர்காலத்தில் இதுபோல பேசக் கூடாது என்று பிரதமர் அறிவுறுத்த வேண்டும். கேரள நிலையை ஆராயமத்திய அரசு அனுப்பிய நிபுணர் குழு புதன்கிழமைதான் திருவனந்தபுரம் வந்தது. இப்படி இருக்கும்போதுசிக்குன் குனியாவால் யாருமே சாகவில்லை என்று அன்புமணி எப்படி கூறலாம்? என்றார் அச்சுதானந்தன்.

இதற்கிடையே, மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் சிக்குன் குனியா, எலிக் காய்ச்சல், டெங்குஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து கேரள அமைச்சரவை அவசரமாக கூடி ஆலோசித்தது.

மாநிலம் முழுவதும் நோய் தடுப்பு மற்றும் நோய் ஒழிப்பு நடவடிக்கைக்காக ரூ. 1 கோடி நிதியை முதல் கட்டமாகஒதுக்க முடிவு செய்யப்பட்டது. கேரளாவில் நோய்க் கிருமிகளை கண்டுபிடிக்கும் ஆய்வகத்தை ஏற்படுத்தவும்தீர்மானிக்கப்பட்டது.

சிக்குன் குனியாவுக்கு கேரளாவில் இதுவரை 75 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 68 பேர் ஆலப்புழைமாவட்டத்தில் மட்டும் இறந்திருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் 1 லட்சம் பேர் சிக்குன் குனியாவால்பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிக்குன்குனியா பீதியினால் கேரளாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.குட்டநாடு, குமரகம், ஆலப்புழா, கோவளம், கொல்லம் ஆகிய முக்கிய சுற்றுலா கேந்திரங்களிலும் சிக்குன்குனியாக தீவிரமாக பரவி வருவதால் அங்கு செல்ல சுற்றுலா பயணிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+