பாக்யராஜ் கூட்டத்தில் திமுக கோஷ்டிகள் அடிதடி
பொன்னேரி:
இயக்குனர் பாக்யராஜ் கலந்து கொண்ட திமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால்பாக்யராஜ் தனது பேச்சை நிறுத்தி விட்டு அவசரமாகக் கிளம்பினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தைஇயக்குனர் பாக்யராஜ் மேற்கொண்டார்.பொன்னேரி பஸ் நிலையம் அருகே மேடையில் ஏறி பேச தொடங்கினார். மேடையில் இருந்தவர்களின்பெயர்களைச் சொல்லி அவர்களே, அவர்களே என பாக்யராஜ் சொல்லிக் கொண்டிருந்தபோது, சிலர் குறுக்கிட்டுஇவர் பெயரைச் சொல்லுங்கள், அவர் பெயரைச் சொல்லுங்கள் என்று கூறினர்.
இதையடுத்து மேடையில் சலசலப்பு ஏற்பட்டது. பல்வேறு திமுக கோஷ்டியினருக்கும் இடையே மோதல்மூண்டது. ஒருவருக்கொருவர் கடுமையாக பேசிக் கொண்டனர். சிறிது நேரத்தில் அடிதடியிலும் இறங்கினர்.இதனால் மேடை போர்க்களமாக மாறியது.
யார் அடிக்கிறார்கள், யார் அடி வாங்குகிறார்கள் என்பதே தெரியாத அளவுக்கு மோதல் வலுவாக இருந்தது.இதை எப்படி அடக்குவது என்று தெரியாமல் போலீஸார் குழம்பி நின்றனர். பொதுமக்களும் அங்கிருந்து சிதறிஓடினர்.
இதைப் பார்த்த பாக்யராஜ், உங்களிடையே இவ்வளவு பிரச்சினை இருக்கும் என்பது எனக்குத் தெரியாது.உங்களுக்கு எனது பேச்சை கேட்பதை விட சண்டை போடுவதற்குத்தான் நேரம் சரியாக இருக்கும் எனநினைக்கிறேன். எனவே நான் கிளம்புகிறேன், மக்களை சிந்தித்துப் பார்த்து நல்ல முடிவாக எடுத்துவாக்களியுங்கள் என்று கூறி விட்டு கிளம்பி விட்டார்.
இந்த கோஷ்டி மோதல் குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications