தந்தை-மகள் போட்டி: மகளுக்கு இன்று கல்யாணம்
சென்னை:
சென்னை அருகே புள்ளிலைன் என்ற ஊராட்சியின் தலைவர் பதவிக்கு தந்தையும், மகளும் போட்டிபோடுகின்றனர். இன்று மகளுக்கு திருமணம் நடக்கிறது.
சென்னை அருகே செங்குன்றத்தை அடுத்துள்ளது புள்ளிலைன் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவர் பதவிக்குஜெயபால் என்பவர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அவரது மகள் ஜான்சிராணியும் போட்டியிடுகிறார்.ஒரே வீட்டில் இருந்து கொண்டு ஒரே பதவிக்கு அப்பாவும், மகளும் போட்டி போடுவதால் ஊர் மக்கள்வியப்புடன் அவர்களது பிரசாரத்தை வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதில் இன்னொரு வேடிக்கைஎன்னவென்றால் ஜான்சி ராணிக்கு இன்று கல்யாணம் நடக்கிறது.
அவருக்கும் பிரேம்குமார் என்பவருக்கும் ஆண்டார்குப்பம் முருகன் கோவிலில் இன்று திருமணத்திற்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. திருமண ஏற்பாடுகளையும் தந்தை ஜெயபால்தான் படு மும்முரமாக பார்த்து வருகிறார்.
தேர்தல் களத்தில் மகள் தன்னை எதிர்த்தாலும் கூட அவரது திருமண ஏற்பாடுகளையும் படு பொறுப்பாக செய்துவரும் ஜெயபாலிடம் மகளே எதிர்த்துப் போட்டியிடுவதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்டால்,மக்கள் சேவைக்கு முன்னால் மகள் எல்லாம் எம்மாத்திரம்? எனது மகள் திருமணத்தை முடித்து விட்டு மறுபடியும்தீவிர பிரசாரத்தில் ஈடுபடப் போகிறேன் என்கிறார்.என்னே கடமையுணர்வு..
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications