அழகிரியை 100 கிமீ வெளியேற்ற வேண்டும்-அதிமுக
சென்னை:
முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியை மதுரை மத்திய தொகுதியிலிருந்து 100 கி.மீ தொலைவுக்குஅப்புறப்படுத்த வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்கு அதிமுக கோரிக்கைவிடுத்துள்ளது.
இதுதொடர்பாக நரேஷ் குப்தாவுக்கு அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் ஓ.பன்னீர் செல்வம் அனுப்பியுள்ளகடிதத்தில், மு.க.அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் மதுரை மத்திய தொகுதியில் பல்வேறு முறைகேடுகளில்ஈடுபட்டு வருகிறார்கள். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். அதிமுகவினர் மீது வன்முறையைஏவி வருகின்றனர்.அழகிரியை மதுரையை விட்டு அப்புறப்படுத்தி 100 கிலோமீட்டர் தொலைவுக்கு அனுப்ப வேண்டும். அதேபோலஅழகிரியின் கூட்டாளிகளான சூடம் மணி, முபாரக் மந்திரி உள்ளிட்டோரை வேறு திசையில் 100 கிலோமீட்டர்தொலைவுக்கு அப்பால் கொண்டு செல்ல வேண்டும்.
அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா மீதான தாக்குதலுக்கு அழகிரிதான் காரணம். ஆனால் அவர் மீதுஇதுவரை மதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யதிமுக தயாராக உள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த திமுகவினர் குறித்து ஆதாரப்பூர்வமாக அதிமுகவினர் புகார் கொடுத்தும்அவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அதிமுகவினர் மீதே வழக்குப் போட்டுவருகின்றனர்.
அழகிரி மதுரை மத்திய தொகுதியில் இருக்கும் வரை அங்கு இடைத் தேர்தல் முறையாகவும், அமைதியாகவும்,நியாயமாகவும் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை. குண்டர் படையுடன் தொகுதிக்குள் சுற்றி வரும் அழகிரியைமுதலில் அங்கிருந்து வெளியேற்றினால்தான் தேர்தலை அமைதியாக நடத்த முடியும்.
மேலும் மதுரை மத்திய தொகுதி தேர்தல் பார்வையாளர் சஞ்சீவ் குமாரும், மதுரை மாநகர காவல்துறை ஆணையர்சிதம்பரச்சாமி ஆகியோரும் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். எனவே இவர்கள் இருவரையும்உடனடியாக மாற்ற வேண்டும்.
அதேபோல மதுரை மத்திய தொகுதிக்குள் உள்ள அனைத்து கல்யாண மண்டபங்களையும் பூட்டி அவற்றின்சாவிகளை தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவிடம் ஒப்படைக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
மதுரையில் அதிமுக சார்பில் தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் முற்றுகையிட்டு கரன்சி மழையை கொட்டிக்கொண்டுள்ளனர். அவர்களை சமாளிக்க அழகிரி தனது ஆட்களையும் படையையும் இறக்கிவிட்டுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications