கேரள அமைச்சர் மீது வழக்கு: ஜெயமாலா
பெங்களூர்:
சபரிமலை விவகாரம் தொடர்பாக எனது புகழை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்ட கேரளஅறநிலையத்துறை அமைச்சர் சுதாகரன், திருவாங்கூர் தேவஸ்தான வாரிய தலைவர் ராமன் நாயர்,உண்ணிகிருஷ்ண பணிக்கர் ஆகியோர் மீது வழக்குப் போடப் போவதாக நடிகை ஜெயமாலா கூறியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஜோதிடர் உண்ணிகிருஷ்ண பணிக்கர் பார்த்த தேவ பிரச்சன்னத்தில், சபரிமலைகோவிலில் ஒரு பெண் நுழைந்து விட்டதாகவும், இதனால் கோவில் தீட்டுப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில், கோவிலில் நுழைந்த பெண் நான் தான். 18 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் பிரபாகருடன்சபரிமலைக்குச் சென்ற நான், அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி கோவில் கருவறைக்குள் நுழைந்தேன். அங்குஐயப்பன் விக்கிரகத்தை தொட்டு வணங்கினேன் என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார் கன்னட நடிகைஜெயமாலா.
இதையடுத்து ஜெயமாலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கேரளாவில் வலுத்தது.இதுதொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட திருவாங்கூர் தேவஸம் போர்டு அதிகாரி விஜயக்குமார், இந்த சர்ச்சைநடிகை ஜெயமாலாவும், உண்ணிகிருஷ்ண பணிக்கரும் சேர்ந்து தீட்டிய சதித் திட்டம் என தெரிவித்தார்.
இந்த நிலையில், கேரள உயர்நீதிமன்றம் ஜெயமாலா விவகாரம் தொடரப்பட்ட வழக்கை விசாரித்து, ஜெயமாலா,பணிக்கர் மீது விசாரணை நடத்தத் தேவையில்லை என்று நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
இந்தச் சூழ்நிலையில் நேற்று பெங்களூரில் ஜெயமாலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எனதுகணவரும், நடிகருமான பிரபாகருக்கு 1987ம் ஆண்டு காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அவர்குணமடைந்து வந்த நிலையில், அவருடன் நான் ஐயப்பன் கோவிலுக்கு சென்றேன்.
எனது கணவரால் இருமுடியை தூக்கி வர முடியாததால், நான் எனது தலையில் வைத்துத் தூக்கிச் சென்றேன்.முக்கிய பிரகர்களுக்கான வழியில் எங்களை கோவில் அதிகாரிகள் அனுமதித்தனர்.
அந்தப் பாதை கோவில் கருவறை வரை செல்லும். அப்போது அந்தப் பாதையில் நெரிசல் ஏற்பட்டதால் எனதுதலையில் இருந்த இருமுடி நழுவி கீழே விழுந்து கருவரைக்கு போய் விட்டது.
அதை அங்கிருந்த பூசாரிகளோ, அதிகாரிகளோ எடுத்துக் கொடுத்திருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது.ஆனால் யாரும் எடுத்துத் தரவில்லை. இதனால் தான் நானே உள்ளே சென்று எடுத்தேன். அப்போது ஐயப்பன்விக்கிரகத்தை தொட்டு விட்டேன்.
இதுதொடர்பாக மன்னிப்பு கேட்டு தேவஸம் போர்டுக்கு கடிதம் எழுதினேன். இதையடுத்து தேவஸம் போர்டுவிசாரணைக்கு உத்தரவிட்டது. என்னை அமைதியாக இருக்குமாறு போர்டு என்னைக் கேட்டுக் கொண்டது.நானும் அமைதியாக இருந்தேன்.
ஆனால் இதை பயன்படுத்திக் கொண்டு கேரள அறநிலையத்துறை அமைச்சர் சுதாகரன், தேவஸம் போர்டுதலைவர் ராமன் நாயர், உண்ணிகிருஷ்ண பணிக்கர் ஆகியோர் எனது புகழை கெடுக்கும் விதமாக செயல்படஆரம்பித்தனர். எனவே அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன்.
கோவில் வருமானத்தை குறி வைத்து ராமன் நாயரும், பணிக்கரும் செயல்படுகிறார்கள். அரசியல் ரீதியாக லாபம்பெற சுதாகரன் நினைக்கிறார். இவர்களின் கூட்டு சதிக்கு எனது பெயரை காவு கொடுக்க நினைக்கிறார்கள்.
கோவில்களில் பெண்கள் நுழைவதை யாரும் தடுக்க முடியாது. அது அடிப்படை உரிமை. எந்த சட்டத்திலும்இதற்கு தடை கிடையாது. எனவே இந்த உரிமையை நிலை நாட்ட நான் போராடுவேன் என்றார் ஜெயமாலா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications