சிக்குன்குனியாவால் உயிரிழப்பா?-அன்புமணி
திருவனந்தபுரம்:
சிக்குன் குனியாவை கேரள அரசு கொள்ளை நோயாக அறிவித்துள்ளது
கேரளாவில் சிக்குன் குனியா படு வேகமாக பரவி வருகிறது. ஆலப்புழா மாவட்டம்தான் இந்த நோயால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரை சிக்குன் குனியாவுக்கு 81 பேர் இறந்துள்ளனர்.நோய்த் தடுப்பு மற்றும் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கேரள அரசு விரைந்து எடுத்து வருகிறது.வீடுகளிலிருந்து பரவும் கொசுக்களைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும், அரசுடன் ஒத்துழைக்கவேண்டும் என அம்மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந் நிலையில் சிக்குன் குனியாவை கொள்ளை நோயாகவும் கேரள அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக கேரளத்தில் சிக்குன் குனியா நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நலத்துறை அமைச்சர்அன்புமணி பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
சிக்குன் குனியாவால் நாட்டில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் குறித்து நிபுணர்கள்அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே காச நோய், இதய நோய் உள்ளவர்கள் சிக்குன்குனியா நோய்க்கு ஆளாகும்போது முந்தைய நோய்கள் தீவிரமடைந்து உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம்.
பொதுவாக சர்வதேச ஆய்வுகளின்படி சிக்குன் குனியா நோயால் உயிரிழப்புகள் ஏற்படுவதில்லை என்றார்.












Click it and Unblock the Notifications