நுழைவுத் தேர்வு: இம்மாதத்திற்குள் இறுதி முடிவு
சென்னை:
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை வைத்துக் கொள்வதா அல்லதுரத்து செய்வது விடுவதா என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்என்று முன்னாள் துணைவேந்தரும், இதுதொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் தலைவருமானமு.அனந்தகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நுழைவுத் தேர்வை நீடிப்பதா, ரத்து செய்வதா என்பது குறித்து அரசுக்கு ஆலோசனை சொல்ல தமிழகஅரசு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. அனந்த கிருஷ்ணன் தலைமையிலான இந்தக் குழு பல்வேறு தரப்பினரின்ஆலோசனைகளைப் பெற்றுள்ளது.இதைத் தொடர்ந்து நேற்று இக்குழுவின் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் அனந்த கிருஷ்ணன்செய்தியாளர்களிடம் பேசுகையில், நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்வது தொடர்பாக நான்குவழிமுறைகளை இக்குழு கையாண்டு வருகிறது. அதாவது மக்கள் கருத்து, புள்ளி விவரங்கள், நீதிமன்றத்தீர்ப்புகள் மற்றும் குழுவினரின் யோசனைகள்.
கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்து கருத்துக்களைச்சேகரித்துள்ளோம். இதற்காக மதுரையிலும், சென்னையிலும் தலா ஒருமுறை கூட்டம் போடப்பட்டது. இதுதவிரகடிதங்கள், இமெயில்கள் வாயிலாகவும் மக்களிடமிருந்து யோசனைகளை சேகரித்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நுழைவுத் தேர்தவிலும், அரசு பொதுத் தேர்தவிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றவிகிதம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன. கிராமப்புற, தமிழ் வாயிலாக படித்த, ஏழை, எளியபிற்படுத்தப்பட்ட மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டன.
முந்தைய காலங்களில் நீதிமன்றங்கள் தெரிவித்துள்ள யோசனைகள், அறிவுறுத்தல்கள் ஆகிய அம்சங்களும்ஆராயப்பட்டன. மேலும் குழு உறுப்பினர்கள் தெரிவித்த யோசனைகளும் ஆராயப்பட்டன.
இதன் அடிப்படையில் குழு அறிக்கை தயாரித்து தமிழக அரசிடம் இம்மாத இறுதிக்குள் அறிக்கை அளிக்கும்.அதற்கு முன்பாக வருகிற 11ம் தேதி இறுதி ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
நாங்கள் அளிக்கும் அறிக்கையை ஆராய்ந்து அரசு இறுதி முடிவை அறிவிக்கும். நாங்கள் இதுவரை நடத்தியஆலோசனைக் கூட்டங்கள் மூலம் நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு பலமாக இருப்பது தெரிய வந்துள்ளது என்றார்அனந்தகிருஷ்ணன்.
இந்தக் குழுவில் உயர் கல்விச் செயலாளர் கணேசன், தொழில்நுட்பத் துறை இயக்குநர் பிரபாகரன், சட்டத்துறைசெயலாளர் தீனபந்து, முன்னாள் செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications