சென்னைக்கு பூகம்ப ஆபத்து அதிகம்!
சென்னை:
சென்னை நகரில் மண் வளம் குறைந்து வருவதால் பூகம்ப அபாயம் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில்தெரிய வந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் சென்னை நகரில் மண் வளம் குறித்த ஒரு ஆய்வை நடத்தியது. இதன்முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.இந்திய அளவில் பூகம்ப அபாயம் அதிகம் உள்ள பகுதிகளின் பட்டியலில் சென்னை, கோவை, சேலம் ஆகியநகரங்களில் 3வது மண்டலத்தில் உள்ளன. இதன்படி இங்கு பாதிப்பு சற்று குறைவாக இருக்கும்.
ஆனால் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியுள்ள ஆய்வின்படி சென்னை நகரம் 4வது மண்டலத்திற்குநகர்ந்துள்ளது. அதாவது மிக மிக அதிக ஆபத்து ஏற்படும் பகுதிகளின் பட்டியலில் சென்னை சேர்ந்துள்ளது.
சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் பூகம்ப அபாயம் அதிகரித்துள்ளது. வடபழனி, அடையார், கிண்டி,வியாசர்பாடி, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பூகம்ப ஆபத்து அதிகம் உள்ளதாம்.
சென்னை நகரில் மண் வளம் மிகவும் குறைந்துள்ளதாலும், நகரின் பல பகுதிகளில் மண் வளம் 15 மீட்டர்அளவுக்கு சுத்தமாக இல்லாததாலும் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை நகரில் தற்போதைய சூழ்நிலையில் பூகம்பம் ஏற்பட்டால் அதன் அளவு 6.3 முதல் 7.3 ரிக்டராகஇருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டால் கான்க்ரீட் காடாக மாறியுள்ளசென்னைக்கு பெரும் பொருள் இழப்பும், உயிரிழப்பும் ஏற்படும்.
இதேபோல மயிலாப்பூர், ஆழ்வார்ப்பேட்டை, ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு ஆகிய பகுதிகளுக்கும் பூகம்பஆபத்து அதிகரித்துள்ளது. இருப்பினும் இங்கு மண் வளம் சற்றே பாதிக்கப்பட்டுள்ளதால், இங்கு பாதிப்பு அதிகம்இருக்காது. அதேசமயம் மக்கள் நெருக்கம் இங்கு அதிகம் இருப்பதால் உயிரிழப்பை நினைத்துக் கூட பார்க்கமுடியாத நிலை உள்ளது.
சாலிகிராமம், நந்தனம், மேற்கு மாம்பலம், அடையார் ஆகிய பகுதிகளிலும் பூகம்ப ஆபத்து அதிகம் உள்ளதாம்.
சென்னை நகரில் பூகம்பம் ஏற்பட்டால் அது மத்திய பகுதியில்தான் இருக்கும் எனவும், அதன் பாதிப்பு வடசென்னை முதல் தென் சென்னை வரை பரவி பெரும் ஆபத்தை உருவாக்கும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications