சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இலங்கை வெற்றி
அகமதாபாத்:
அகமதாபாத்தில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் கோப்பை (மினி உலகக் கோப்பை) கிரிக்கெட் போட்டியின் முதல்தகுதிச் சுற்றுப் போட்டியில் வங்கதேச அணியை இலங்கை 37 ரன்களில் வீழ்த்தியது.
மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி நேற்று தொடங்கியது. முதலில்இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள், வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கிடையே தகுதிச் சுற்றுப்போட்டிகள் நடைபெறுகின்றன.அகமதாபாத்தில் நடந்த முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கையும், வங்கதேசமும் விளையாடின. முதலில்ஆடிய இலங்கை அணி அதிரடியாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய உபுல் தரங்கா 105ரன்களைக் குவித்தார்.
மரவான் அட்டப்பட்டு 41 ரன்களை சேர்த்தார். கேப்டன் ஜெயவர்த்தனே 35 ரன்களையும், ஜெயசூர்யா 31ரன்களையும், சங்கக்காரா 22 ரன்களையும் எடுத்தனர். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இலங்கை 302 ரன்களைகுவித்தது.
பின்னர் களம் இறங்கிய வங்கதேசம் முதல் 2 விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்தது. ஹசன் மற்றும் அகமதுஆகியோர் நிலைத்து நின்று ஓரளவுக்கு ரன்களை சேர்த்தனர். ஹசன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 69 ரன்களைசேர்த்தார். அகமது 33 ரன்களும், ரேஸா 34 ரன்களையும் எடுத்தனர்.
பின்னர் வந்த வீரர்களில் மொர்டசா (29), ரஸ்ஸாக் (21) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு ரன்கள் எடுத்தனர்.மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.
இறுதியில், 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 265 ரன்களை மட்டுமே வங்கதேசத்தால் சேர்க்கமுடிந்தது. இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
இன்று நடைபெறும் 2வது தகுதிச் சுற்றுப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், ஜிம்பாப்வே அணியும்மோதுகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications