மதுரை: கல்யாண மண்டபங்களுக்கு சீல் வைப்பு!
மதுரை:
மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள கல்யாண மண்டபங்கள், விடுதிகள் பூட்டப்பட்டு சீல்வைக்கப்பட்டுள்ளன.
மதுரை மத்திய தொகுதிக்கு வருகிற 11ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு நாளை மாலை 5மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. படு சூடாக நடந்து வரும் பிரசாரத்தின்போது சில நாட்களுக்கு முன்பு திமுக,அதிமுக இடையே கடும் மோதல் ஏற்பட்டது.இந்த மோதலைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவுக்கு அதிமுக சார்பில் கடிதம்எழுதப்பட்டது. அதில் மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட கல்யாண மண்டபங்கள், விடுதிகளைை மூடி சீல் வைக்கவேண்டும், முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியை 100 கிலோமீட்டர் தொலைவுக்கு கொண்டு விடவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் விடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மேலும் அசம்பாவித சம்பங்கள், மோதல்கள், வன்முறைகள் ஏற்படாத வண்ணம்முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.
அதன் ஒரு கட்டமாக தொகுதிக்குள் உள்ள கல்யாண மண்டபங்கள், விடுதிகளை மூட நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 56 திருமண மண்டபங்கள், 119 தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களின்ஒத்துழைப்புடன் சீல் வைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், இங்கு ஏற்கனவே புக் ஆகியுள்ள திருமணம் உள்ளிட்டபொது நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடுதிகள், மண்டபங்களில் குழுவாகவோ, தனியாகவோ யாரும் தங்கக் கூடாது. அப்படியே தங்குவதாகஇருந்தால் உரிய காரணத்தைக் கூறி விட்டு, காவல்துறை அனுமதியுடன்தான் தங்க முடியும். இங்குதங்குபவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை காவல்துறையிடம் தினசரி தெரிவிக்குமாறு விடுதி, மண்டபஉரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத அரசியல் தலைவர்கள், வாக்குரிமை இல்லாத தலைவர்கள், பிரமுகர்கள்நாளை மாலை 5 மணிக்கு மேல் இங்கு தங்கக் கூடாது என நரேஷ் குப்தா உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் பாதுகாப்புக்ககாக வந்துள்ள துணை ராணுவத்தினர் ஆரப்பாளையம், ஜெய்ஹிந்துபுரம், கோச்சடைஉள்ளிடட பகுதிகளில் உள்ள கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் போலீஸார் 3000 பேர், சிறப்புப் படையைச் சேர்ந்த 350 போலீஸார், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர் உள்பட மொத்தம் 5000 பேர் மதுரை மத்திய தொகுதி பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்படவுளளனர். நாளை மறு நாள் அதாவது 10ம் தேதி இவர்கள் கொடி அணிவகுப்பு நடத்தவுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications