பகுஜன் சமாஜ் தலைவர் கான்ஷிராம் மரணம்
டெல்லி:
![]() |
தலித் தலைவரும், பகுஜன் சமாஜ் கட்சியை நிறுவியவருமான கான்ஷிராம் டெல்லியில் இன்று அதிகாலைமாரடைப்பால் மரணமடைந்தார்.
நீண்ட காலமாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த கான்ஷிராம், டெல்லி ஹுமாயூன் சாலையில் உள்ளஉ.பி. மாநில முன்னாள் முதல்வர் மாயாவதியின் இல்லத்தில் இன்று அதிகாலை 12.30 மணிக்கு மரணமடைந்தார்.
அவருக்கு வயது 72. திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வந்த கான்ஷிராக்கு இருசகோதரர்களும், இரு சகோதரிகளும் உள்ளனர்.
கான்ஷிராமின் மரண செய்தியை செய்தியாளர்களிடம் மாயாவதி கண்ணீர் மல்க வெளியிட்டார். அவர்கூறுகையில்,
கட்சிக்கும், சமூக நீதிக்காக பாடுபவர்களுக்கும் கான்ஷிராமின் மரணம் பெரும் இழப்பாகும்.அவரது உடல் தகனம் புத்த மத முறைப்படி இன்று மாலை 4 மணிக்கு நிகாம் புத் காட் சுடுகாட்டில் நடைபெறும்.இறுதிச் சடங்குக்கு முன்பாக கான்ஷிராமின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக கட்சித் தலைமைஅலுவலகத்தில் உடல் வைக்கப்பட்டிருக்கும் என்றார் மாயாவதி.
பஞ்சாப் மாநிலம் ரோபர் மாவட்டம் கவாஸ்பூர் கிராமத்தில் 1934ம் ஆண்டு பிறந்தவர் கான்ஷிராம்.1973ம்ஆண்டு நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்காக போராடுவதற்காக பிற்பட்டோர் மற்றும்சிறுபான்மை அரசு ஊழியர் சம்மேளனத்தை தொடங்கினார் கான்ஷிராம்.
1982ம் ஆண்டு இதை தலித் சோஷித் சமாஜ் சங்கர்ஷ சமிதி என்ற அரசியல் கட்சியாக மாற்றினார். பின்னர்1984ம் ஆண்டு இக்கட்சியின் பெயர் பகுஜன் சமாஜ் கட்சியாக மாற்றப்பட்டது.
1993ம் ஆண்டு நடந்த உ.பி. சட்டசபைத் தேர்தலில் இக்கட்சி பெரும் சக்தியாக உருவெடுத்தது. அந்த தேர்தலில்பகுஜன் சமாஜ் கட்சியும், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சியும் இணைந்து ஆட்சியைப் பிடித்தன.மாயாவதி முதல்வராகப் பதவியேற்றார்.
பின்னர் 1995ம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து உ.பி. தேர்தலை சந்தித்தது பகுஜன் சமாஜ் கட்சி.அத்தேர்தலில் வெற்றி பெற்ற இக்கூட்டணியின் சார்பில் மாயாவதி மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார்.ஓராண்டுக்குப் பின் முதல்வர் பதவியை பாஜகவுக்கு தந்திருக்க வேண்டும். ஆனால், ஆட்சியை ஒப்படைக்கமாயாவதி மறுத்ததால் கூட்டணி உடைந்து ஆட்சி கவிழ்ந்தது.
கான்ஷிராம் 2 முறை லோக்சபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இப்போது மரணத்தை தழுவியுள்ள அவர்ராஜ்யசபா எம்.பியாக இருந்து வந்தார்.
2002ம் ஆண்டு மாயாவதியை தனது அரசியல் வாரிசாக அறிவித்தார் கான்ஷிராம். இந்த நிலையில்,கான்ஷிராமுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பல காலமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அதன் பின்னர்மாயாவதியின் வீட்டிலேயே அவர் வசித்து வந்தார்.
அவரது உடல் நலக்குறைவு தொடர்பாக பெரும் சர்ச்சையும் நிலவி வந்தது. கான்ஷிராமின் குடும்பத்தினர்மாயாவதி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் மாயாவதி மீதுகான்ஷிராமின்குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி, கான்ஷிராமின் உடல் நிலையைபரிசோதிக்க டாக்டர்கள் குழுவை அனுப்ப உத்தரவிட்டது. இந்த நிலையில், கான்ஷிராம் மாரடைப்பால்இறந்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி













Click it and Unblock the Notifications