தேர்தல் ஆணையத்திடம் திமுக மீது அதிமுக புகார்
சென்னை:
மதுரையில் அதிமுகவினருக்கு எதிராக நடந்த வன்முறைக்கு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லைஎன்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு அதிமுக புகார் கடிதம் அனுப்பியுள்ளது.
தலைமை தேர்தல் கமிஷனுக்கு அதிமுக அனுப்பியுள்ள புகாரில், மதுரையில் அதிமுகவினருக்கு எதிராக நடந்தவன்முறைக்கு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த போலீஸ் அதிகாரிகளை இடம் மாற்றம்செய்ய வேண்டும் இல்லையெனில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இதையடுத்து மதுரை வன்முறை சம்பவங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்ய துணை தேர்தல் கமிஷனர்ஆர்.பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அவருடன் தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவும்வன்முறை நடந்த இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளார்.
மதுரை வன்முறை சம்பவங்களில் போலீசார் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாககுற்றஞ்சாட்டப்பட்டுள்ளதால் அவர்களிடம் அவசர அறிக்கை ஒன்றை உடனே தருமாறு தேர்தல் கமிஷன்கேட்டுள்ளது.
இதையடுத்து மதுரை போலீஸ் கமிஷனருடன் தேர்தல் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இடைத் தேர்தலுக்கானபாதுகாப்பு ஏற்பாடுகள், கைது செய்யப்பட்டுள்ள ரெளடிகள் மற்றும் வன்முறை சம்பவங்கள் பற்றி முழுமையானஅறிக்கை தருமாறு தேர்தல் ஆணைய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல்: பாதுகாப்பு தீவிரம்:
இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும்பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு இருகின்றன.
தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பாதுகாப்புகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகம் முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை கைது செய்யும் பணியும் தீவிரமாகநடைபெற்று வருகிறது. இந் நிலையில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கதிட்டமிடப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவர்.
இது தவிர பதட்டமான வாக்குச் சாவடிகளை சுற்றிலும் சுமார் 100 அடி தூரம் வரையிலும் பாதுகாப்புபோடப்படும்.


Click it and Unblock the Notifications
