பெண் கற்பழிப்பு: 2 டாக்டர்களின் கொடூரம்!
திருநெல்வேலி:
13 வயது பெண்ணை போதை மருந்து கொடுத்து அடிமையாக்கி கற்பழித்து சித்திரவதை செய்த அப்பா, மகனான2 டாக்டர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நெல்லையை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவம் குறித்த விவரம்:நெல்லை வண்ணாரப்பேட்டையில் கிளினிக் நடத்தி வருபவர் சிவராமகிருஷ்ணன். இவரது கிளினிக்கில் கடந்த 10ஆண்டுகக்கு முன்பு பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் உடல் நலக்குறைவுகாரணமாக சேர்க்கப்பட்டார்.
நம்பிராஜனின் 2வது மனைவி கிருஷ்ணவேணியும், முதல் மனைவி மூலம் பிறந்த 13 வயது மகள் வித்யாவும்(இப்போது வயது 24), அருகில் இருந்து நம்பிராஜனை பார்த்துக் கொண்டனர். அடிக்கடி மருத்துவமனைக்குவந்து சென்றதால், டாக்டர் சிவராமகிருஷ்ணனுக்கும், கிருஷ்ணவேணிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நம்பிராஜன் திடீர் மரணமடைந்தார். சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்ததாககூறப்பட்டது. இதைத் தொடர்ந்து சிவராமகிருஷ்ணனுக்கும், கிருஷ்ணவேணிக்கு கள்ளத் தொடர்பு வலுத்தது.அதேசமயம், சிவராமகிருஷ்ணனின் மகன் டாக்டர் ஹரிசங்கரும், கிருஷ்ணவேணியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்.
அப்பாவும், மகனும் அடுத்தடுத்து கிருஷ்ணவேணி வீட்டுக்கு வந்து சென்றனர். இந்த சமயத்தில் இருவரின்பார்வையும், வித்யா மீது படிந்தது. இருவரும் வித்யாவை அடைய முயன்றனர். இதை கிருஷ்ணவேணியிடம்தெரிவித்தனர்.
கிருஷ்ணவேணியும், வித்யாவிடம், இரு டாக்டர்களின் விருப்பத்திற்கு இணங்குமாறு கூறியுள்ளார். ஆனால்வித்யா இதற்கு மறுத்து விட்டார். இதனால் வித்யாவை வழிக்கு கொண்டு வர கிருஷ்ணவேணியின் உதவியுடன்போதை மாத்திரையை வித்யாவுக்குப் பழக்கினர். அதன் பின்னர் வித்யாவை வீட்டில் அடைத்து வைத்துடாக்டர்களான அப்பாவும், மகனும் சேர்ந்து கற்பழித்துள்ளனர்.
அதன் பின்னர் போதையில் வைத்து நிர்வாண கோலத்தில் படம் எடுத்தனர். பின்னர் அதை வித்யாவிடம் காட்டிக்காட்டி கற்பழித்து வந்தனர். தங்களோடு நிறுத்திக் கொள்ளாமல் தங்களது நண்பர்கள், நெருங்கிய அரசியல்புள்ளிகள் ஆகியோருக்கும் வித்யாவை விருந்தாக்கினர் டாக்டர்கள்.
இந்தத் தகவல் வித்யாவின் சகோதரருக்குத் தெரிய வர 17 வயதான அவர் டாக்டர்களை அணுகி தட்டிக்கேட்டுள்ளார். ஆனால் திடீரென அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். கடந்த ஆண்டுகிருஷ்ணவேணியும் இறந்தார்.
இரு டாக்டர்களின் செக்ஸ் கொடூரத்தில் சிக்கி சித்திரவதைப்பட்டு வந்த வித்யா, தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்தபிரடெரிக் ஸ்டான்லி என்பவரின் உதவியுடன் மாவட்ட காவல்துறை எஸ்.பியிடம் புகார் கொடுத்தார்.இதையடுத்து நெல்லை மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. பின்னர், டவுன் மகளிர்காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
புகாரில் சிக்கிய தந்தையும், மகனும் டவுன் காவல் நிலையத்திற்கு சமரசம் பேச முன்வந்தனர். வித்யாவைபோலீஸாரும் அழைத்தனர். அங்கு வைத்து வித்யாவுக்கு ரூ. 20 லட்சம் பணம் கொடுப்பதாக டாக்டர்கள்கூறியுள்ளனர். ஆனால் அதை வித்யா ஏற்க மறுத்து விட்டார். இது நடந்த சில நாட்களிலேயே வித்யாதலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து பிரடெரிக் ஸ்டான்லி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல்செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ராமலிங்கம், ராஜசூர்யா ஆகியோர் வித்யாவைக் கண்டுபிடித்துஅக்டோபர் 12ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து போலீஸார் வித்யாவைக் கண்டுபிடித்து நெல்லை குற்றவியல் 2வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.பின்னர் வித்யா, மதுரையில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார்.
இதைத் தொடர்ந்து டாக்டர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீஸார் வலை வீசி தேடிவருகின்றனர். நம்பிராஜன், கிருஷ்ணவேணி, வித்யாவின் சகோதரர் ஆகியோர் மரணங்கள் குறித்தும்போலீஸாருக்கு தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களை இந்த இரு டாக்டர்களும் சேர்ந்து கொலைசெய்திருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது.
இரு டாக்டர்களும் ஒடி விட்டதால் மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றி வந்த பணியாளர்களும்வெளியேறி விட்டனர். யாராவது மருத்துவமனைக்கு வருகிறார்களை என்பதை போலீஸார் தீவிரமாககண்காணித்து வருகின்றனர்.
தலைமறைவாகி விட்ட இரு டாக்டர்களும் மும்பை அல்லது பெங்களூருக்குத் தப்பி ஓடியிருக்கலாம் எனகருதப்படுகிறது. அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மதுரை அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வித்யாவைக் கடத்த டாக்டர்களின்அடியாட்கள் முயன்றதாக தெரிய வந்துள்ளது.நெல்லை நீதிமன்றத்தில் வித்யா ஆஜர்படுத்தப்பட்டபோது, சிலகார்களில் ஒரு கும்பல் அங்கு வந்துள்ளது. அவர்களைப் பார்த்ததும் நீதிமன்ற ஊழியர்களுக்கு சந்தேகம்ஏற்பட்டுள்ளது. அவர்கள் வித்யாவைக் கடத்த வந்த கும்பலாக இருக்கக் கூடும் என அவர்கள் அஞ்சினர்.
இதையடுத்து வித்யாவை தனியாக விடுவது பாதுகாப்பானதல்ல என்று உத்தேசித்த போலீஸார் நீதிமன்றஅனுமதியுடன் மதுரை காப்பகத்தில் சேர்க்க முடிவு செய்தனர். ஆனால் மதுரை காப்பகத்திற்கும் அந்த கும்பல்பின்னர் வந்துள்ளது. அவர்கள் வித்யாவை சந்தித்து வழக்கை வாபஸ் பெறுமாறு கூறி மிரட்டியதாகவும்கூறப்படுகிறது.
போலீஸ் அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு 2 பேர் உள்ளே நுழைந்து வித்யாவை தனியாக கூட்டிச் சென்றுஇவ்வாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காப்பக நிர்வாகிகள், நெல்லை போலீஸாருக்குத் தகவல்கொடுத்துள்ளனர். இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வித்யாவை ஆஜர்படுத்த அழைத்துச்செல்லும்போது மிகவும் ரகசியமாக, பலத்த பாதுகாப்புடன் கூட்டிச் செல்ல நெல்லை போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications