விபத்து: 2 பேப்பர் போடும் சிறுவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் இன்று அதிகாலை நடந்த கோரமான சாலை விபத்தில் வீடு வீடாக சென்று செய்தித்தாள்களைபோடும் 2 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
மணிகண்டன் (17), பிரசாந்த் (14), லோகநாதன் (17) ஆகிய மூன்று பேரும் வீடு வீடாக சென்றுசெய்தித்தாள்களை போடும் வேலையை செய்து வந்தனர்.இன்று அதிகாலை, வழக்கம் போல தங்களது மோட்டார் சைக்கிளில் 3 பேரும் செய்தித்தாள்களுடன் சென்றனர்.அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில்பலமாக மோதியது.
இதில் லோகநாதன் படுகாயமடைந்தார். மற்ற இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.செய்தித்தாள் கட்டுக்களுடன் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றதால்தான் நிலை தடுமாறு விபத்துஏற்பட முக்கியக் காரணம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications