ஆயுத பேர ஊழல்: நாடு முழுவதும் சிபிஐ ரெய்ட்!
டெல்லி:
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆயுத பேர ஊழல் வழக்கு தொடர்பாக நாடு முழுவதும் 35க்கும் ஏற்பட்டஇடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்திய ராணுவம், கடற்படை ஆகியவற்றுக்கு ஆயுதங்கள் வாங்குவதில் பெருமளவில் முறைகேடுகள்நடப்பதையும், கோடிக்கணக்கான பணம் கைமாறுவதையும் டெஹல்கா இணையதளம் சில ஆண்டுகளுக்கு முன்புவெளிப்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுதொடர்பாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுக்கள்எழுந்தன. இந்த வழக்கு தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயுதத் தரகர்கள் உள்ளிட்ட 30க்கும்மேற்பட்டோரின் 35 க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
டெல்லியில் மட்டும் 27 இடங்களில் சோதனை நடந்தது. டெல்லி தவிர மும்பை, பெங்களூர், சண்டிகர், சங்ரூர்ஆகிய இடங்களிலும் இந்த சோதனை நடந்தது. சோதனைக்குள்ளனவர்களில் முக்கியமானவர்கள் சுரேஷ் நந்தா,சுதிர் செளத்ரி, சஹானி, பிபின் கண்ணா ஆகியோர் முக்கியமானவர்கள்.
சங்ரூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அரவிந்த் கண்ணாவுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.அவரது தந்தைதான் பிபின் கண்ணா. இவர்கள் அனைவரும் கோடிக்கணக்கான பணத்தை லஞ்சமாக பெற்றதாககுற்றச்சாட்டு உள்ளது.இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications