இஸ்ரேலுக்கு இடம் பெயரும் மிஸோரம் யூதர்கள்
அய்ஸ்வால்:
மிஸோரம் மாநிலத்தில் வசித்து வரும் 218 யூதர்கள் இஸ்ரேலுக்கு இடம் பெயர முடிவு செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் யூத இனத்தவர் வசித்து வருகின்றனர். அதுபோல இந்தியாவிலும்கணிசமான அளவிலான யூதர்கள் உள்ளனர். மிஸோரம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் 7000 பினேமனசே என்ற பிரிவைச் சேர்ந்த யூதர்கள் வசித்து வருகிறார்கள்.ஆதி கால இஸ்ரேலிலிருந்து யூத இனத்தைச் சேர்ந்த 10 பழங்குடி பிரிவினர் அங்கிருந்து விரட்டப்பட்டு விட்டனர்.அவர்களில் ஒரு பிரிவுதான் மனசே என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலிருந்து விரட்டப்பட்ட இவர்கள் முதலில்சீனாவுக்கும் அதன் பின்னர் வட கிழக்கு இந்தியாவிலும் குடியேறினர். சிலர் மியான்மரில் அடைக்கலம் புகுந்தனர்.
சிரியா, ஈரானிலும் இந்தப் பிரிவைச் சேர்ந்த சிலர் வசித்து வந்தனர். ஆனால் கால ஓட்டத்தில் இப்பழங்குடி பிரிவுயூதர்களின் எண்ணிக்கை மிகவும் சுருங்கிப் போய் விட்டது. இந்த பழங்குடி பிரிவினர் குறித்த விவரங்கள்இஸ்ரேல் அரசிடம் இல்லாததால் இவர்களை யூதர்களாக அங்கீகரிக்க அந்த அரசு தயங்கி வந்தது.
இந்த நிலையில் மிஸோரம் உள்ளிட்ட வட கிழக்கு இந்தியாவில் வசித்து வரும் மனசே பிரிவு யூதர்கள்,தங்களையும் யூதர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று இஸ்ரேல் அரசைக் கோரி வந்தனர்.
இக்கோரிக்கையைப் பரிசீலித்த இஸ்ரேல் அரசு மனசே பிரிவு குறித்து விசாரணை நடத்தியது. இதன்தொடர்ச்சியாக, இஸ்ரேலிலிருந்து கடந்த ஆண்டு யூத இன தலைமை மதகுருவான ரப்பி ஸ்லோமோ அமர்மிஸோரம் வந்தார்.
மிஸோரம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் மனசே பிரிவு யூதர்களை அவர் சந்தித்து, யூதர்களாக மாறிஇஸ்ரேலில் வசிக்க விருப்பமா என்பதை கேட்டறிந்தார். அதற்கு அவர்கள் தாங்கள் யூத இன பழக்கவழக்கங்களையே கடைப்பிடித்து வருவதாகவும், மத நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தலைமை மத குரு அளித்த அறிக்கையின் அடிப்படையில், வட மனசே பிரிவினரையூதர்களாக இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக 218 பேர் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளனர்.அங்கேயே நிரந்தரமாக தங்கவும் முடிவு செய்துள்ளனர்.
அக்டோபர் 3வது வாரத்தில் இவர்கள் இஸ்ரேல் கிளம்புகின்றனர் என்று மிஸோரம் தலைநகர் அய்ஸ்வாலில்உள்ள ஷவே இஸ்ரேல் ஹீப்ரு மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலுக்கு செல்லவுள்ள மனசே பிரிவினருக்கு அலியா என்ற மதமாற்ற சடங்குகள் நடத்தப்பட்டு யூதர்களாகஅங்கீகரிக்கப்பட்ட பின்னர் இஸ்ரேலில் நிரந்தரமாக குடியேற அங்கீகரிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications