போலீஸ் அதிகாரிகளுக்கு ஜெ. வார்னிங்!
சென்னை:
காலம் மாறும், காட்சி மாறும், ஆட்சியும் மாறும், அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வரும். இப்போதுபாரபட்சமாக நடந்து கொள்ளும் காவல் துறை அதிகாரிகளை அப்போது பார்த்துக் கொள்கிறேன் என்று அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
சேலத்தில் நடந்த அதிமுக கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூடத்தில் ஜெயலலிதா பேசுகையில், சர்வதேசசந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து விட்டதாக கூறி ஆறுமுறை பெட்ரோல், டீசல் விலையை மத்தியஅரசு உயர்த்தியது.ஆனால் இப்போது சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 18 டாலர்கள் வரை குறைந்துவிட்டது. இப்போது பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பார்களா? இதுகுறித்து மத்திய ஆட்சியில் பங்குவகிக்கும் திமுகவும், தமிழகத்தைச் சேர்ந்த 13 மத்திய அமைச்சர்களும் உடனடியாக பதிலளிக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடத்தப்பட்டால் நிச்சயம் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும். ஆனால்இப்போது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. தேர்தல் பணியாற்ற விடாமல் அதிமுக நிர்வாகிகள்,கூட்டணிக் கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்து உள்ளே தள்ளி வருகின்றனர்.
காவல்துறையின் கீழ் மட்டத்தில் உள்ள போலீஸார் நடுநிலையோடு செயல்படுகிறார்கள். ஆனால் மேல்மட்டத்தில்உள்ள சில அதிகாரிகள்தான் அரசியல் கண்ணோட்டத்தோடு செயல்படுகின்றனர். ஆளுங்கட்சித்துக்குத் துணைபோகின்றனர், ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுக்கின்றனர்.
அவர்கள் யார் என்று எனக்குத் தெரியும். அவர்கள் பெயரை மனதில் பதித்து வைத்துள்ளேன். அவர்களுக்குஎச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன். காலம் மாறும், காட்சிகள் மாறும், ஆட்சியும் மாறும், அதிமுக மீண்டும்ஆட்சிப் பொறுப்புக்கு வரும். அப்போது பாரபட்சமாக நடக்கும் காவல்துறை அதிகாரிகளை சும்மா விட்டு விடமாட்டேன், தக்க நடவடிக்கை எடுப்பேன், எனவே பார்த்து நடந்து கொள்ளுங்கள்.
சென்னையில் பேசிய முதல்வர் கருணாநிதி என் மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். முன்னாள் சபாநாயகர்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பாண்டியனை தீர்த்துக் கட்டுமாறு நான் அதிமுகவினரிடம்தெரிவித்தேனோம். இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
எனது வாழ்க்கையில் நான் யாரையும் தீர்த்துக் கட்ட வேண்டும் என்று நினைத்தது கூட கிடையாது. அப்படி எந்தகட்டளையையும் நான் பிறப்பிக்கவில்லை. யார் யாரைப் பார்த்து கொலை செய்யத் திட்டமிட்டதாக புகார்கூறுவது? முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணனைக் கொன்றது யார்.? திமுகவினர்தானே என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications