வாய்தா, வாய்தா! ஜெ.வுக்கு கோர்ட் கண்டிப்பு
சென்னை:
வருமான வரி வழக்கில் அடுத்தடுத்து வாய்தா கேட்பதா என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னைஉயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள சசி என்டர்பிரைசஸ் நிறுவனம்வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாதது தொடர்பாக வருமான வரித்துறை, இருவர் மீதும் சென்னைஎழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நான்கு வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.இந்த வழக்குகளில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கோரி ஜெயலலிதாவும், சசிகலாவும்,சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை கடந்த மாதம் விசாரித்த உயர்நீதிமன்றநீதிபதி பிரபா ஸ்ரீதேவன், இந்த வழக்கில் இனிமேல் வாய்தா கேட்கக் கூடாது.
அக்டோபர் 10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று நாட்கள் விசாரணை நடைபெறும் என அறிவித்திருந்தார். அதன்படிஇன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் வாய்தா கேட்கப்பட்டது. இதைக்கேட்டதும் கோபமடைந்த நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், இப்படி மீண்டும் மீண்டும் வாய்தா கேட்டால் இந்த வழக்கைஎப்போது முடிப்பது? வாய்தா கேட்பது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் என்று கண்டிப்புடன் கூறினார்.
பின்னர் வழக்கை 25ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்று முதல் 3 நாட்களுக்கு தொடர்ந்து தினசரி விசாரணைநடைபெறும் என்று அறிவித்தார்.












Click it and Unblock the Notifications