ஊழியர் ஸ்டிரைக்: அதிமுக மீது ஜிப்மர் புகார்
சென்னை:
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் அதிமுகவுக்கும் பங்கு உள்ளது என்றுமருத்துவமனை இயக்குநர் சுப்பாராவ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்தெரிவித்துள்ளார்.
ஜிப்மர் மருத்துவமனைக்கு தன்னாட்சி அந்தஸ்து தருவதை எதிர்த்து அதன் ஊழியர்கள் காலவரையற்றவேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். இந்த நிலையயில், புதுவை அதிமுக சார்பில் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதில், ஜிப்மருக்கு தன்னாட்சி வழங்கும் முடிவை அனுமதிக்கக் கூடாது, தடை விதிக்க வேண்டும் என்று புதுவைஅதிமுக செயலாளர் அன்பழகன் கோரியிருந்தார். இதற்கு பதில் அளிக்குமாறு கூறி ஜிப்மர் இயக்குநர் டாக்டர்சுப்பாராவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி சுப்பாராவ் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கே விசாரணைக்கு உகந்ததல்ல. விளம்பரம்தேடுவதற்காகவும், அரசியல் காரணத்திற்காகவும்தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தத்தில் அதிமுகவுக்கும் பங்கு உள்ளது என்பதையைே இது காட்டுகிறது. எனவே இந்தமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டாலும் கூட மத்திய அரசின் சுகாதார நலத்துறையின் கீழ் தான் ஜிப்மர்தொடர்ந்து இயங்கும். எனவே இந்த முயற்சியைத் தடுத்தால், புதுச்சேரி மக்களுக்கு இழப்பு ஏற்படும் என்றுகூறியுள்ளார்.
மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சந்துரு ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. அப்போது,வேலைநிறுத்தத்தின்போது டிஸ்மிஸ் செய்யப்பட்ட 5 ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என ஊழியர்களின் வழக்கறிஞர் பிரசாத் கோரினார்.
இதை பரிசீலித்த நீதிபதிகள், 5 பேரும் மனு கொடுத்தால் அதுகுறித்து பரிசீலிக்குமாறு ஜிப்மருக்கு உத்தரவிட்டனர்.பின்னர் திங்கள்கிழமைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications