எரிச்சலில் பேசுகிறார் ஜெ.: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதா எரிச்சலில் உள்ளார். எரிச்சலில் இருப்பவர்கள் எதை வேண்டுமானாலும்பேசுவார்கள் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் திமுக தலைமையிலான ஜனநாயகமுற்போக்குக் கூட்டணியின் மாநகராட்சித் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது.இதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசுகையில், மதுரை, திருச்சி, நெல்லைஆகிய நகரங்களில் நான் கண்ட காட்சி, பெற்ற உணர்வு இந்த உள்ளாட்சித்தேர்தலிலும், நாடாளுமன்ற, சட்டசபைத் தேர்தல்களில் பெற்றது போல சிறந்தவெற்றியைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவை தமிழகத்தில் இன்று சிலர் வெறுப்பு கண்ணோடு பார்ப்பதாகவும்,அதனால் அவர்கள் (அதிமுகவினர்) நெருப்பு மொழிகளை உதிர்ப்பதாகவும்துரைமுருகன் கூறினார். நெருப்புக்கு நான் அஞ்ச மாட்டேன். அஞ்சவும்தேவையில்லை. ஏனென்றார் நெருப்புக்கு மாற்று கண்டுபிடித்த இயக்கம் திமுக.

இதே சென்னையில் 1967ம் ஆண்டு அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தபோது,சென்னையில் உள்ள குடிசைகள் எல்லாம் எரியத் தொடங்கின. அந்த குடிசைகளுக்குஎல்லாம் நெருப்பு வைக்கப்பட்டது.

குடிசைவாசிகள்தான் திமுகவை வெற்றி பெற வைத்தார்கள் என்று ஏழைகளின் வீடுகள்எரிக்கப்பட்டது. அதை பார்த்து கலங்கினோம். அன்று தொடங்கியது தான் குடிசைமாற்று வாரியம். நாம் சட்டமன்றத் தேர்தலிலே அளித்த வாக்குறுதிகளைப் பார்த்து இதுநடக்குமா என்று கேட்டு கேலி கிண்டல் செய்தவர்கள் எல்லாம் இப்போது அவைநடைபெறுவதைப் பார்த்து துடித்து, இப்போது இவை எல்லாம் நீடிக்குமா என்றுகேட்கிறார்கள்.

நீடிக்காது என்று அவர்களே முடிவுரையும் கூறுகிறார்கள். திமுக அரசின்செயல்பாடுகள், திட்டங்கள், சாதனைகள் அனைத்தும் நிச்சயம் நீடிக்கும். ஜெயலலிதாஅரசியலை விட்டு ஓடத் தயாரா என்று துரைமுருகன் கேட்டார்.

அவர் ஓடத் தேவையில்லை. அவர் இருப்பதால் எனக்கு பயம் ஏதும் இல்லை.

எந்த உறுதிமொழி அளித்தாலும் அதை நிறைவேற்றிக் காட்டுபவன் தான் இந்தகருணாநிதி. 30,000 டிவிகளை முதல் கட்டமாக வழங்கியுள்ளோம். அடுத்து 25லட்சம் டிவிகளை வழங்கவுள்ளோம். இந்த திட்டங்கள் எல்லாம் தேர்தல் முடிந்தபின்னர் நிறுத்தப்பட்டு விடும் என்று மக்களை திசை திருப்புவதற்காக கூறுகிறார்கள்.

இவர்கள் சொன்னவற்றையெல்லாம் நிறைவேற்றி விட்டால் இவர்களை வெல்லவேமுடியாதே, நாம் ஆட்சிக்கு வர முடியாதே என்று இருந்ததை இழந்தவர்கள் வருந்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எரிச்சலில் இருக்கிறார்கள்.

எரிச்சலில் இருப்பவர்கள் அப்படித்தான் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள்,செய்வார்கள். இந்தப் பிரச்சினையில் விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பைபடித்தவர்கள், பாமரரர்கள், பகுத்தறிவாளர்களிடம் விட்டு விடுகிறேன் என்றார்கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+