மதுரை இடைத் தேர்தல்: நாளை வாக்குப் பதிவு!
மதுரை:
மதுரை மத்திய தொகுதிக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி மிக பலத்த பாதுகாப்புக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் கெளஸ் பாட்ஷா, அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா,தேமுதிக சார்பில் பன்னீர் செல்வம் மற்றும் 16 சுயேச்சைகள் களத்தில் உள்ளனர்.திமுக, அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி நடைபெறுகிறது. இறுப்பினும் இவர்களில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது தேமுதிக வேட்பாளர் பிரிக்கப் போகும் வாக்குகளை வைத்துத்தான் உள்ளது என்பதால்தேமுதிக வேட்பாளரும் முக்கியப் போட்டியாளராக மாறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்டஅனைத்துக் கட்சித் தலைவர்களும் இங்கு பிரசாரம் செய்து வாக்கு சேகரித்துள்ளனர்.
வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துள்ள நிலையில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை இடைவிடாமல் தொடர்ந்து நடைபெறும்.
இத்தேர்தலில் இந்தியாவிலேயே முதல் முறையாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்பயன்படுத்தப்படுகிறது என்பது சிறப்பம்சமாகும்.மதுரை மத்திய தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,32,231. இவர்களில் ஆண்கள் 66,333.பெண்கள் 65,898 ஆவர்.
மொத்தம் 154 வாக்குச் சாவடிகள் உள்ளன. அனைத்துமே பதட்டமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 19 பேர்போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்பயன்படுத்தப்படும்.
மொத்தம் 350 இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது திமுக, அதிமுக இடையே பெரும் மோதல் நடந்தது. இதனால் வாக்குப்பதிவின்போது அசம்பாவித சம்பவங்கள் நிகழலலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து மிக பலத்தபாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலீஸார் தவிர துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொருவாக்குச் சாவடிக்கும் போலீஸார் தவிர 4 துணை ராணுவப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குப் பதிவு முடிந்த பின்னர் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மதுரை மருத்துவக்கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 17ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.












Click it and Unblock the Notifications