மதுரை போலீஸ் கமிஷனர் திடீர் மாற்றம்
சென்னை:
மதுரை மாநகர காவல்துறை ஆணையர் சிதம்பரசாமியை இடமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மத்திய தொகுதிக்கு நாளை இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன்முடிவடைந்தது. சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரசாரத்தின்போது திமுக மற்றும் அதிமுகவினரிடையே கடும்மோதல் ஏற்பட்டது.வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் கொடுக்க முயன்றதாக கூறி அதிமுகவினர் அவர்களை மறித்து தட்டிக்கேட்டதால் இந்த மோதல் மூண்டது. இதில் அதிமுகவினர் பலர் தாக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மதுரை திலகர் திடல், தெற்குவாசல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் திமுகவினர்தரப்பில் புகார்கள் கொடுக்கப்பட்டபோது அவற்றை பெற போலீஸார் மறுத்ததாகவும், மாறாக புகார்கொடுத்தவர்கள் மீதே போலீஸார் வழக்குப் பதிவு செய்வதாகவும் அதிமுக குற்றம் சாட்டியது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் ஓ.பன்னீர் செல்வம் புகார்கொடுத்தார். மு.க.அழகிரியை தொகுதியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும், காவல்துறை ஆணையர்சிதம்பரச்சாமியை இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக கோரிக்கை வைத்தது.
இந்தப் புகாரை தேர்தல் ஆணையம் பரிசீலித்தது. அதேபோல, வேட்பு மனு தாக்கல் நாளன்று திமுக மற்றும்அதிமுக வேட்பாளர்களுடன் விதிமுறைகளை மீறி நூற்றுக்கணக்கானவர்கள் தேர்தல் அதிகாரி மூக்கையாவின்அறைக்குள் நுழைந்து விட்டனர்.
இதற்கு தேர்தல் அதிகாரி மூக்கையா கண்டனம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்குஅவர் புகார் அனுப்பியிருந்தார். இந்தப் புகாரையும் ஆணையம் பரிசீலித்தது. இப்புகார்கள் குறித்து விசாரிக்கதுணை தேர்தல் ஆணையர் பட்டாச்சார்யா மதுரைக்கு விரைந்தார்.
அவர் கொடுத்த அறிக்கையின் கீழ் தற்போது ஆணையரை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், தேர்தல் அதிகாரியின் அறைக்குள்நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் வேட்பாளர்கள் கெளஸ் பாட்ஷாவும் (திமுக), ராஜன் செல்லப்பாவும்(அதிமுக) பெரும் விதி மீறலில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக, அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுள்ள்ளனர். இது தொடர்பாக திமுக, அதிமுகஆகிய கட்சிகள் கொடுத்துள்ள விளக்கம் போதுமானதாக இல்லை. இது மிகப் பெரிய விதிமீறல் என்றுகடுமையாக கூறிய தேர்தல் ஆணையம் இவர்களைக் கட்டுப்படுத்த மாநகர காவல்துறை ஆணையர் தவறிவிட்டார். அவர் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளார் என்று கடுமையாக கூறியுள்ளது.
இந்த நிலையில் ஆணையர் சிதம்பரசாமியை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தென்மண்டல ஐஜி சஞ்சீவ் குமாரை, மதுரை ஆணையர் பொறுப்பை ஏற்குமாறும் அது உத்தரவிட்டுள்ளது.
தொகுதி தேர்தல் அதிகாரியின் புகார்கள், தேர்தல் ஆணைய பார்வையாளர்களின் அறிக்கை ஆகியவற்றின்அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இடமாற்றம் தொடர்பான உத்தரவு தலைமைச் செயலாளர் திரிபாதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் சஞ்சீவ்குமார் புதிய ஆணையராக பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது. மதுரை மத்திய தொகுதிக்கு நாளை வாக்குப் பதிவுநடைபெறவுள்ள நிலையில், ஆணையர் மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவைப் பாராட்டிப்பேசியதால் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்ததுநினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications