காங்.தலைவர் எஸ்ஆர்பிக்கு சிக்குன்குனியா?
கோவை:
சட்டமன்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்திற்குசிக்குன்குனியா காய்ச்சல் வந்துள்ளதாக தெரிகிறது. கோவையில் உள்ளமருத்துவனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமானஎஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், உள்ளாட்சித் தேர்தலையொட்டி தீவிரப் பிரசாரத்தில்ஈடுபட்டிருந்தார்.இந்த நிலையில் சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் அடித்து வந்தது. காய்ச்சல் விட்டுவிட்டு வந்தது. மேலும், மூட்டு வலியும், உடல் சோர்வும் காணப்பட்டது. இதையடுத்துஅவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் சிக்குன்குனியா காய்ச்சல் வந்திருக்கலாம் எனமுடிவு செய்தனர். மேலும் அவருக்கு ரத்த பரிசோதனை நடத்தவும் முடிவு செய்தனர்.அவரது ரத்த பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்குஅனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்தால்தான் சிக்குன்குனியாவின் பாதிப்பாகஇருக்குமா என்பது தெரிய வரும்.
எஸ்.ஆர்.பியை காங்கிரஸ் தலைவர்கள், பிரகர்கள் நேரில் பார்த்து உடல் நலம்விசாரித்தவண்ணம் உள்ளனர்.












Click it and Unblock the Notifications