5 நிமிடத்தில் 3000 ரயில் டிக்கெட்டுகள் காலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையிலிருந்து மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்படவுள்ள தீபாவளி சிறப்புரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் விற்று விட்டதால்,டிக்கெட் இதில் முறைகேடு நடந்திருக்குமோ என்று பயணிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின் போது சென்னையிலிருந்துவெளியூர்களுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் செல்வது வழக்கம். இவர்களில் 90 சதவீதம் பேர் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

தீபாவளிக்கு 2 மாதங்களுக்கு முன்பே இவர்கள் ஊருக்கு டிக்கெட் எடுத்து விடுவார்கள். அதையும் மிஸ்செய்தவர்களுக்காக சிறப்பு ரயில்கள் விடப்படுவது வழக்கம். முன்பெல்லாம் ஒரு ரயிலோ, இரண்டு ரயிலோசிறப்பு ரயிலாக விடுவார்கள். அதுவும் சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு மட்டுமே விடப்படும்.

ஆனால் மத்தியில் பாமகவைச் சேர்ந்த ஏ.கே.மூர்த்தி ரயில்வே இணை அமைச்சரானபோது இதை மாற்றினார்.விசேஷ சமயங்களில் நாகர்கோவில் மட்டுமல்லாது, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி என பல்வேறுநகரங்களுக்கும் பல சிறப்பு ரயில்களை இயக்க உத்தரவிட்டார்.

இதனால் ஒவ்வொரு தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களின்போது அதிக அளவிலான சிறப்புரயில்கள் தென் தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது.

இந்த ஆண்டும் தீபாவளியையொட்டி நான்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னையிலிருந்து நாகர்கோவில், தூத்துக்குடி, கோவை, மதுரை ஆகிய நகரங்களுக்கு இந்த சிறப்பு ரயில்கள்இயக்கப்படுகின்றன. மொத்தம் நான்கு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதற்கான முன்பதிவு இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தீபாவளிக்கு டிக்கெட்போட காலை 5 மணியிலிருந்தே சென்னை எழும்பூர், சென்டிரல், மாம்பலம் என அனைத்து முன்பதிவுநிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது.

8 மணிக்கு கவுண்டர்கள் திறக்கப்பட்டன. திறந்த 5வது நிமிடத்திலேயே வெயிட்டிங் லிஸ்ட் எண்ணிக்கை100க்கும் மேல் வரத் தொடங்கியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் இதற்கு மேல் டிக்கெட்உறுதியாகாது என்பது தெரிந்து கடும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கவுண்டர்களைத் திறந்த 5வது நிமிடத்திலேயே டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் எப்படி, இதில் ஏதோமுறைகேடு நடந்திருப்பதாக பயணிகள் கொதிப்படைந்தனர். நான்கு ரயில்களையும் சேர்த்தால் கிட்டத்தட்ட 3200படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் உள்ளன. இவற்றுக்கு 5 நிமிடங்களுக்குள் டிக்கெட் வழங்க முடியுமாஎன்பதே பயணிகளின் சந்தேகம்.

ஆனால் இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை என்கிறது தெற்கு ரயில்வே. ரயில்வே அதிகாரி ஒருவர்கூறுகையில், மக்களின் சந்தேகத்தில் தவறே இல்லை. அவர்களது கேள்வியில் தவறே இல்லை. ஆனால் இதில்முறைகேடுகளுக்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு.

ஏராளமான தனியார் ஏஜென்டுகள், புரோக்கர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது ஆட்களை பல்வேறு ரயில்நிலையங்களுக்கு அனுப்பி முன்பதிவு செய்திருக்கலாம். அவர்களை நாம் எளிதில் அடையாளம் காண முடியாது.

மேலும், சென்னை நகரிலேயே நிறைய முன்பதிவு மையங்கள் உள்ளன. இதுதவிர தமிழகம் முழுவதிலும்ஏராளமான ரயில்வே முன்பதிவு மையங்கள் உள்ளன. எனவே 5 நிமிடங்களில் 3000க்கும் மேற்பட்ட ரயில்டிக்கெட்டுகள் விற்பனையாகியிருப்பது சாத்தியம்தான் என்கிறார் அவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+