ஓட்டு கேட்டால் தப்பா? கேப்டன் டென்ஷன்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தேமுதிகவுக்காக பிரசாரம் செய்வது அவ்வளவு பெரிய குற்றமா? எங்களை தடுக்கப் பார்ப்பது நியாயமா என்றுகேட்டுள்ளார் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்.

மதுரை அருகே திருப்பரங்குன்றம் நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பஸ்நிலையம் அருகே விஜயகாந்த் வேனிலிருந்தபடி பிரசாரம் செய்தார்.

விஜயகாந்த் பேசுகையில், தேமுதிக வேட்பாளர்கள் பிரசாரம் செய்யும்போது சில முக்கியக் கட்சிகளைச்சேர்ந்தவர்களால் மிரட்டப்படுகிறார்கள். தேர்தலில் போட்டியிடுவதும், பிரசாரம் செய்வதும், ஓட்டுக் கேட்பதும்அவ்வளவு பெரிய குற்றமா? மக்களை சந்திப்பது தவறா? எங்களை மிரட்டுவது நியாயமா?

மக்களை நேரடியாக சந்திக்க முடியாதவர்கள் தான் எங்களை மிரட்டுகிறார்கள். அவர்களை எப்படி சந்திக்கவேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களை சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

எனக்கு சினிமாவில் ஆடிப் பாடி, கட்டிப் பிடித்து நடித்து விட்டுப் போகத் தெரியாதா என்ன? அதையெல்லாம்விட்டு விட்டு உங்களைத் தேடி வந்திருக்கிறேன் என்றால் அது உங்களது நல்லதுக்காகத்தான்.

உங்களுக்கு ஊழலற்ற ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் வெயிலைக் கூட பொருட்படுத்தாமல்இங்கே வந்துள்ளேன். தமிழக போலீஸார் அரசியல்வாதிகளுக்கு அடிமையாகி விட்டார்கள். இது எனக்கு வேதனையாக இருக்கிறது.தேவையில்லாமல் ஏழை, எளியவர்களை உள்ளே தள்ளுகிறார்கள். இதை நிறுத்த வேண்டும்.

திருப்பரங்குன்றத்தில் ரவுடிகள் அட்டகாசம் இருப்பதாக கூறுகிறார்கள். எங்களது கையில் நிர்வாகம் வந்தால்,நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நகரத்தை ரவுடிகள் இல்லாத நகராக மாற்றுவேன்.

எங்களுக்கும் ஒரு வாய்ப்பு தந்து பாருங்கள். நல்லாட்சியைத் தருகிறோம், சாதனை படைத்துக் காட்டுகிறோம்என்றார் விஜயகாந்த்.

வருகிறது அரசியல் பிரளயம்:

இதற்கிடையில் மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் பிரசாரத்திற்கான கடைசி நாளான நேற்று விஜயகாந்த் கலந்து கொண்ட பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. வடக்கு மாசி வீதி-மேலமாசி வீதி சந்திப்பில் நடந்த இந்த பொதுக் கூட்டத்திற்கு கடலென தொண்டர்கள், பொதுமக்கள்திரண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில், திண்டுக்கல் இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அரசியலில் பெரும் மாற்றங்கள் நடந்தன.அதேபோல மதுரை மத்திய தொகுதி தேர்தல் முடிவின் மூலம் தமிழக அரசியலில் பெரும் பிரளயம் ஏற்படப் போகிறது. அப்படி வர வேண்டும்என்றுதான் நானும் நினைக்கிறேன்.

மத்திய தொகுதியையும், மதுரை மாநகராட்சியையும் எங்களிடம் ஒப்படையுங்கள். நாங்கள் செய்யும் மாற்றங்களை நிச்சயம் நீங்கள் வரவேற்பீர்கள். இந்தமண்ணில் பிறந்து, வளர்ந்து, சினிமாவில் சேர்ந்து, இப்போது இங்கேயே கட்சியும் ஆரம்பித்து உங்கள் முன் ஓட்டு கேட்டு வந்து நிற்கிறேன்.

யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொன்னேன். சொன்னபடிதான் நடந்தும் வருகிறேன். என் கூட்டணி எப்போதுமே மக்களுடன்தான். திமுகதேன் கூடு என்றும் அதில் கை வைத்தால் தேனீக்கள் கொட்டும் என்றும் கூறுகிறார் முதல்வர் கருணாநிதி.

தேன் கூட்டிலிருந்து தேனை எடுப்பது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும். எனது கட்சியைச் சேர்ந்தவர்களை மிரட்டுகிறார்கள். குறிப்பாக தேர்தல்பணியாற்றும் இளைஞர்களைக் கூப்பிட்டு தேர்தல் முடியும் வரை இங்கே இருக்கக் கூடாது, ஊரை விட்டு ஓடி விடுங்கள் என்று மிரட்டுகிறார்கள்.

இதை செய்வது போலீஸார்தான் என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. எனது கட்சி இளைஞர்கள், தொண்டர்கள் தட்டினால் பற்றிக்கொள்ளக் கூடியவர்கள். அவர்களை தேவையில்லாமல் சீண்டிப் பார்க்க வேண்டாம். அவர்களை குடும்பத்துடன் நிம்மதியாக வாழ விடுங்கள்.

தேவையில்லாமல் கெடுத்து விடாதீர்கள். ஒரு கட்சிக்கு குறைந்தது 2 எம்.எல்.ஏக்கள் இருந்தால்தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.தேமுதிகவுக்கு இப்போது நான் மட்டுமே உள்ளேன். எனவேதான் இந்தத் தொகுதியில் தேமுதிகவுக்கு வெற்றியைக் கொடுத்து அங்கீகாரம் பெறமதுரை மத்திய தொகுதி மக்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் விஜயகாந்த்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+