கிரண் தேசாய்க்கு புக்கர் விருது
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
புகழ்பெற்ற புக்கர் விருதை இந்திய எழுத்தாளர் கிரண் தேசாய் பெற்றுள்ளார்.
உலக அளவில் சிறந்த நூல்களுக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றுதான்புக்கர் விருது. இந்தியர்கள் பலரும் இந்த விருதினைப் பெற்றுள்ளனர். 1997ம் ஆண்டுஅருந்ததி ராய் இந்த விருதினை முதன் முதலில் பெற்ற இந்தியர் என்ற பெருமையைப்பெற்றார்.இந்த ஆண்டுக்கான விருது எழுத்தாளர் கிரண் தேசாய்க்குக் கிடைத்துள்ளது. அவர்எழுதிய தி இன்ஹெரிடென்ஸ் ஆப் லாஸ் என்ற நூலுக்காக இந்த விருதுகிடைத்துள்ளது. மிக இளம் வயதில் இந்த விருதினை வெல்லும் முதல் பெண்எழுத்தாளர் கிரண் தேசாய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசாயின் தாயார் அனிதா தேசாயும் பிரபலமான எழுத்தாளர்தான். இவர் மூன்று முறைபுக்கர் விருதுக்காக தனது நாவல்களை அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்குக்கைகூடாத விருது மகளுக்குக் கிடைத்துள்ளது.
லண்டனில் நடந்த விருது வழங்கும் விழாவில் கிரண் தேசாய்க்கு புக்கர் விருதுஅளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications