ஆயுத ஊழல்: பெர்னாண்டஸ் மீது வழக்கு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இஸ்ரேலிடமிருந்து பாரக் ரக ஏவுகணைகளை வாங்கியதில் ரூ. 2 கோடி அளவுக்கு லஞ்சம் பெறப்பட்டதுதொடர்பாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.இதற்கு சோனியாவின் தூண்டுதலே காரணம் என பெர்னாண்டஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 2000மாவது ஆண்டு டெஹல்கா இணையதளம் பாதுகாப்புத் துறைக்கு ஆயுதங்கள் வாங்கியதில் நடந்தமுறைகேடுகளை அம்பலப்படுத்தியது. நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய இந்த சம்பவம் தொடர்பாகதற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ வசம் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. ஆயுத தரகர்கள்,காங்கிரஸ் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடந்தது.

இந்த நிலையில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், சமதாக் கட்சி தலைவருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீதுசிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இஸ்ரேலிடமிருந்து பாரக் ரக ஏவுகணைகளை வாங்கிய விவகாரத்தில் ரூ. 2கோடிக்கு லஞ்சம் பெறப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இந்த வழக்கில், பெர்னாண்டஸ் தவிர சமதாக் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெயா ஜெட்லி, முன்னாள்கடற்படை தளபதி சுஷில் குமார், சமதாக் கட்சியின் முன்னாள் பொருளாளர் ஆர்.கே.ஜெயின் ஆகியோர் மீதுமுதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாரக் ஏவுகணை ரூ. 1,150 கோடிக்கு வாங்கப்பட்டது. மொத்தம் 200 ஏவுகணைகள் வாங்கப்பட்டன. இவற்றைவாங்குவதற்காக நடந்த ஆயுத பேரத்தில் ஜெயா ஜெட்லி ஏஜென்டு போல செயல்பட்டு ரூ. 2 கோடியைலஞ்சமாக பெற்று பெர்னாண்டஸுக்குக் கொடுத்ததாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இந்தப் புகாரை பெர்னாண்டஸ் மறுத்துள்ளார். இது சோனியா காந்தியின் வேலை, அவர் சொல்லித்தான் சிபிஐஇந்த பொய் வழக்கை போட்டுள்ளது. உண்மையில் நான் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்பதற்குமுன்பாகவே ஆயுத பேரம் முடிவடைந்து விட்டது.

பாரக் ஏவுகணைகளை வாங்கலாம் என்று அப்போது பிரதமருக்கான பாதுகாப்பு ஆலோசகராக இருந்ததற்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தான் பரிந்துரைத்தார். அப்துல் கலாமுடன் பாரக் ஏவுகணைகுறித்து நான் ஆலோசனை நடத்தினேன். அவரும் வாங்கலாம் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்தேஇஸ்ரேலிடமிருந்து ஏவுகணைகள் வாங்கப்பட்டது.

எனவே விசாரணை நடத்த வேண்டுமானால் கலாமிடமிருந்து விசாரணை தொடங்க வேண்டும் என்றுகூறியுள்ளார் பெர்னாண்டஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+