மதுரை: மேலும் 5 போலீஸார் இட மாற்றம்
மதுரை :
மதுரை மாநகர காவல்துறை ஆணையரைத் தொடர்ந்து தற்போது 2 உதவி ஆணையர்கள் உள்பட மேலும் 5காவல்துறையினர் தேர்தல் பணியிலிருந்து மாற்றப்பட்டுள்ளனர்.
மதுரை மத்திய தொகுதி தேர்தல் பிரசாரத்தின்போது திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே கடும்மோதல் நடந்தது. மேலும் அதிமுகவினர் பலர் கைது செய்யப்பட்டு வருவதாகவும், காவல்துறை மீது புகார்கூறியும் தேர்தல் ஆணையத்தில் அதிமுக முறையிட்டது.இந்தப் புகார்கள் குறித்து துணை தேர்தல் ஆணையர் பட்டச்சார்யா மதுரை வந்து விசாரணை நடத்தினார்.இதையடுத்து மாநகர காவல்துறை ஆணையர் சிதம்பரச்சாமி இடமாற்றம் செய்யப்பட்டார். தேர்தல்ஆணையத்தின் இந்த நடவடிக்கையை அடுத்து தற்போது மேலும் 5 அதிகாரிகள் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.
உதவி ஆணையர்கள் குமாரவேலு, ராஜேந்திரன், ஆய்வாளர்கள் உதயசூரியன், சுப்புராமன், புருஷோத்தமன்ஆகியோரை தேர்தல் பணியிலிருந்து நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, தா.கிருட்டிணன் கொலை வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள மு.க.அழகிரி, முபாரக் மந்திரி,எஸ்ஸார் கோபி ஆகியோருக்கான ஜாமீனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அதிமுக சார்பில்மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications