நெல்லை பெண் கற்பழிப்பு: விசாரணை தீவிரம்!
திருநெல்வேலி:
நெல்லையைச் சேர்ந்த இளம் பெண் வித்யாவை அப்பாவும், மகனுமான இரண்டு டாக்டர்கள் பாலியல்சித்திரவதை செய்த வழக்கில் விசாரணை தீவிரமாக நடந்து வருவதாக நெல்லை மாநகர காவல்துறை ஆணையர்உமா கணபதி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
நெல்லையைச் சேர்ந்த இளம் பெண் வித்யா, அவரது 13வது வயதிலிருந்து டாக்டர் சிவராமகிருஷ்ணன், அவரதுமகன் டாக்டர் ரவிசங்கர் ஆகியோரால் பாலியல் சித்திரவதைக்கு ஆளானதாக சமீபத்தில் பரபரப்பு எழுந்தது.வித்யாவுடன் பணியாற்றும் பிரடெரிக் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத்தாக்கல் செய்தார். அதன் பேரில், வித்யாவை போலீஸார் நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர்மதுரையில் உள்ள அரசினர் காப்பகத்தில் அவர் தங்க வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இரு டாக்டர்களும் தன்னை பாலியல் சித்திரவதை செய்யவில்லை, கற்பழிக்கவில்லை என்றுதிடீரென பல்டி அடித்தார் வித்யா. இதனால் இந்த வழக்கில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டது.
இந்தப் பின்னணியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நெல்லை மாநகர காவல் ஆணையர் உமா கணபதிசாஸ்திரி கூறுகையில், முதலில் தான் கற்பழித்து சித்திரவதை செய்யப்பட்டதாக வித்யா புகார் கூறியிருந்தார்.ஆனால் தற்போது அதுபோல நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.
அவர் என்ன புகார் தெரிவித்துள்ளாரோ அதன் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்க முடியும். இந்தவிவகாரம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணையை மேற்பார்வையிட கூடுதல் துணைஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.
விசாரணையின் முடிவில்தான் யாரையும் கைது செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யஇயலும் என்றார்.
இதற்கிடையே வித்யாவை பாலியல் ரீதியாக சிதைத்ததாக கூறப்படும் இரு டாக்டர்களையும் உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட பார்வர்ட் பிளாக் கட்சி கோரியுள்ளது.












Click it and Unblock the Notifications