வாலாஜா: காங். எம்.எல்.ஏ மீது தாக்குதல்
ராணிப்பேட்டை:
சோளிங்கர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி அன்பரசுவின் மகனுமான அருள்அன்பரசு திமுகவினரால் தாக்கப்பட்டார். இதுகுறித்து திமுகவினர் மீது காங்கிரஸார் போலீஸில் புகார்கொடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் வாலாஜாவில் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் அருள் அன்பரசு ஈடுபட்டிருந்தார். அப்போதுஒரு கும்பல் இவரை பயங்கரமாக தாக்கியது. இதில் லேசான காயத்துடன் அன்பரசு உயிர் தப்பினார்.இதுகுறித்து வாலாஜா காவல் நிலையத்தில் மாநில காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் வாலாஜா அசேன்புகார் கொடுத்துள்ளார். அதில், தேர்தல் பிரசாரத்தில் நான், முன்னாள் எம்.பி. அன்பரசு, எம்.எல்.ஏ. அருள்அன்பரசு உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தபோது திமுகவைச் சேர்ந்த 25 பேர் பயங்கர ஆயுதங்களுடன் எங்களைத்தாக்கினர்.
சோடா பாட்டில்கள், இரும்புக் கம்பிகள், சைக்கிள் செயின் உள்ளிட்டவற்றால் நாங்கள் தாக்கப்பட்டோம். அருள்அன்பரசுவைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. அவரை தடியாலும், கல்லாலும் தாக்கினர். இதில் அவரின்சட்டை கிழிந்தது.
அவரது கார் கண்ணாடியையும் அடித்து உடைத்தனர். பெண் வேட்பாளர் ராஜேஸ்வரியும் தாக்கப்பட்டார்.எங்களுடன் வந்த 5 கார்களும் சேதப்படுத்தப்பட்டன.
மாவட்ட திமுக பொறுப்பாளரான ஆர்.காந்தி தூண்டுதலின் பேரில்தான் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதுஎன்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
