சூதாட்டம்:தெ.ஆப்பிரிக்க வீரரிடம் விசாரணை
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்ட கும்பல் தனக்கு ஏராளமான பணம் தருவதாக இரு முறை கூறியதாக தென்னாப்பிரிக்ககிரிக்கெட் வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் டெல்லி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2000மாவது ஆண்டு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள்மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அப்போது தென்னாப்பிரிக்க வீரர்கள் சிலர் கிரிக்கெட் சூதாட்டபுக்கிகளுடன் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது.இதையடுத்து அப்போதைய தென்னாப்பிரிக்க கேப்டன் ஹன்சி குரோனே, நிக்கி போயே, கிப்ஸ் ஆகியோர் மீதுபுகார் கூறப்பட்டது. அவர்கள் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் குரோனே விமானவிபத்தில் பலியாகி விட்டார்.
டெல்லி போலீஸார் விசாரணைக்கு ஆஜராகுமாறு கிப்ஸ் மற்றும் போயேவை கேட்டுக் கொண்டனர். ஆனால்விசாரணைக்கு வர இருவரும் மறுத்து விட்டனர். மேலும் கடந்த 2004, 2005 ஆகிய ஆண்டுகளில் இந்தியா வந்ததென்னாப்பிரிக்கா அணியிலும் இருவரும் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், தென்னாப்பிரிக்க அணிபங்கேற்றுள்ளது. இதில் கிப்ஸ் இடம் பெற்றுள்ளார். ஆனால் போயே வரவில்லை.
நேற்று டெல்லி வந்த கிப்ஸுடன் இரண்டு வழக்கறிஞர்களும் வந்துள்ளனர். இன்று காலை டெல்லி குற்றப் பிரிவுபோலீஸ் இணை ஆணையர் ரஞ்சித் நாராயணன் முன்னிலையில் கிப்ஸ் ஆஜரானார். சுமார் இரண்டரை மணிநேரம் கிப்ஸ் போலீஸாரிடம் பல்வேறு தகவல்களைத் தெரிவித்தார்.
விசாரணைக்குப் பின்னர் இணை ஆணையர் ரஞ்சித் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தவழக்கில் பல புதிய தகவல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. எனவே வழக்கை சரியான கோணத்தில் கொண்டுசெல்ல முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
இருப்பினும் இந்த சூதாட்டத்தில் தொடர்புடைய யாரைக் குறித்தும் கிப்ஸ் உறுதியான ஆதாரங்கள் எதையும்தரவில்லை.
தன்னை சூதாட்டக் கும்பல் 2 முறை தொடர்பு கொண்டு பணம் தருவதாக கூறியதாக கிப்ஸ் ஒத்துக் கொண்டார்.தனது அணி கேப்டன் குரோனே சொல்லியபடியே தான் நடந்து கொண்டதாகவும் கிப்ஸ் தெரிவித்தார்.இருப்பினும் தான் பணம் எதையும் பெற்றுக் கொண்டதாக கிப்ஸ் தெரிவிக்கவில்லை.
விசாரணைக்கு கிப்ஸ் முழுமையாக ஒத்துக் கொண்டார் என்றார் ரஞ்சித் நாராயணன்.












Click it and Unblock the Notifications