புலிகள் தாக்குதலில் 200 ராணுவ வீரர்கள் பலி
கொழும்பு:
இலங்கையின் வட பகுதிகளான முகமலை மற்றும் நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் நடந்த கடும் சண்டையில்200 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 400க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்ததாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் வட பகுதியில், முகமலை, கிலாலி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் விடுதலைப் புலிகள் வசம்உள்ள பகுதிகளையொட்டி நேற்று காலை முதல் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும்சண்டை தொடங்கியது.ராணுவம் மும்முனைத் தாக்குதலை தொடங்கியிருப்பதாக புலிகள் தரப்பு அறிவித்தது. ஆனால் இதை ராணுவம்மறுத்தது. புலிகள்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், அதற்கு ராணுவம் பதிலடிகொடுப்பதாகவும் ராணுவம் தெரிவித்தது.
இந்த கடும் சண்டையின்போது 200 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 400க்கும் மேற்பட்ட வீரர்கள்காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பு தற்போது தெரிவித்துள்ளது. ராணுவத்தினர் அவர்களதுபழைய நிலைகளுக்கே விரட்டியடிக்கப்பட்டு விட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். தங்களது தரப்பில் 10வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராணுவம் மறுப்பு:
ஆனால் ராணுவம் இந்த செய்தியை மறுத்துள்ளது. இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கேதெரிவிக்கையில், விடுதலைப் புலிகள்தான் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் புகுந்து தாக்குதல்நடத்தினர். பதிலுக்கு ராணுவம் திருப்பித் தாக்கியது.
இந்தத் தாக்குதலில் ராணுவத் தரப்பில் 22 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றுதெரிவித்தார்.
ஜெனீவாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் ராணுவம், புலிகளும் தீவிர சண்டையில்ஈடுபட்டிருப்பது பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளுக்கு தடையாக அமையும் என சந்தேகிக்கப்படுகிறது.
அமெரிக்கா பாராட்டு:
இதற்கிடையே, இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்திருப்பதற்குஅமெரிக்கா பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளது.
நார்வே மத்தியஸ்த முயற்சிகளின் விளைவாக இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் வருகிற 28 மற்றும் 29ஆகிய தேதிகளில் ஜெனீவாவில் சந்தித்துப் பேசவுள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கோமக் கருத்துதெரிவிக்கையில், இரு தரப்பினரும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,பாராட்டுக்குரியது.
இரு தரப்பினரும் உடனடியாக மோதல் போக்கை கைவிட்டு விட்டு ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு இடம்கொடுக்க வேண்டும். இலங்கையில் தற்போது நடந்து வரும் சண்டைகள் கவலை தருகின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் நிவாரணம் மற்றும் புணரமைப்புப் பணிகளைமேற்கொள்ள இரு தரப்பினரும் அனுமதித்து ஒத்துழைக்க வேண்டும்.
நார்வே நாட்டின் அமைதி முயற்சிகளை அமெரிக்க அரசு வரவேற்கிறது, பாராட்டுகிறது. இது தொடர வேண்டும்என்றார் மெக்கோமக்.












Click it and Unblock the Notifications