கியூபாவின் முதுபெரும் மனிதர் மரணம்

Subscribe to Oneindia Tamil

ஹவானா:

கியூபாவிலேயே அதிக வயது கொண்ட பெனிட்டோ மார்ட்டினஸ் அப்ரோகன் என்ற 126 வயது மனிதர்மரணமடைந்தார்.

கியாபாவிலேயே அதிக வயதான நபர் என்ற பெருமை படைத்தவர் பெனிட்டோ. கியூபாவில் வயதுமுதிர்ந்தவர்களுக்கு அரசு உதவிகளைப் பெறுவதற்காக ஒரு காலத்தில் போராடி அந்த சலுகையை பெற்றுத்தந்தவர்.

அவருக்கு 126 வயதாவதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது வயது தொடர்பான முழுமையான ஆதாரம் எதுவும்இல்லை. இருப்பினும் பெனிட்டோதான் கியூபாவிலேயே வயது முதிர்ந்தவர் என்று அரசு அங்கீகரித்துள்ளது.

நேற்று பிற்பகல் பெனிட்டோ மரணமடைந்தார். வயது முதிர்ச்சி காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தஅவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

126 வயதானாலும் கூட தெளிவான கண்கள், உறுதியான பேச்சு, நிமிர்ந்த நடை என படு ஆரோக்கியமாகஇருந்தவர் பெனிட்டோ. பச்சைக் காய்கறிகளை மட்டுமே இவர் அதிகம் சாப்பிடுவாராம். கொஞ்சம் போலஇறைச்சி, எப்போதாவது மது அருந்துவது இவரது பழக்கம்.

1880ம் ஆண்டு ஹைதியில் பிறந்தவர் பெனிட்டோ. அதன் பின்னர் கியூபாவில் உள்ள சர்க்கரைத் தோட்டங்களில்பணியாற்றுவதற்காக 1925ம் ஆண்டு கியூபாவுக்கு இடம் பெயர்ந்தார் பெனிட்டோ.

உலகிலேயே அதிக வயதான நபராக அமெரிக்காவின் எலிசபெத் போல்டனை கின்னஸ் புத்தகம் தெரிவிக்கிறது.எலிசபெத்துக்கு 116 வயது ஆகிறது. ஆனால் வயது குறித்த சரியான ஆதாரம் இல்லாததால், பெனிட்டோவுக்குஅந்தப் பெருமை கிடைக்காமல் போய் விட்டது.

கியூபாவில் சிறந்த மருத்துவ வசதியும், சுகாதார வசதிகளும் இருப்பதால் அங்கு சராசரி வயது 77 ஆக உள்ளதுகுறிப்பிடத்தக்கது. இதனால் கியூபாவில் முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில், கியூபாவில் 100 வயதைத் தாண்டி வாழ்பவர்களின் எண்ணிக்கை 2500 எனத்தெரிய வந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் ஆவர்.

100 வயதைத் தாண்டினாலும் கூட, மது அருந்துவது, சிகார் பிடிப்பது, செக்ஸ் வைத்துக் கொள்வது ஆகியவற்றில்வழக்கம் போலவே இந்த தாத்தா, பாட்டிகள் ஈடுபாடு காட்டுவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+