கருணை மனு: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
டெல்லி:
கருணை மனுக்களை பரிசீலிக்கும்போது அரசியல், சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் தண்டனையை ரத்துசெய்வதோ, குறைப்பதோ கூடாது என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. கெளரி சைத்ராவின் கணவர் கெளரி வெங்கட ரெட்டி.இவருக்கு கொலை வழக்கு ஒன்றில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து வெங்கட ரெட்டி சார்பில் அப்போதைய ஆந்திர மாநில ஆளுநர் சுஷில் குமார் ஷிண்டேவிடம்கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைப் பரிசீலித்த சுஷில் குமார் ஷிண்டே, வெங்கட ரெட்டிக்குவிதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
ஆளுநரின் இந்த உத்தரவை எதிர்த்து வெங்கட ரெட்டியால் கொலை செய்யப்பட்டவரின் மகன் எபுரு சுதாகர்என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் அரிஜித் பசாயத், எஸ்.எச்.கபாடியா ஆகியோர் விசாரித்து பரபரப்பு தீர்ப்பைஅளித்துள்ளனர். டிவிஷன் பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு விவரம்:
கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் அளிக்கும் உத்தரவுகள் சட்டரீதியான மறு பரிசீலனைக்குஉட்பட்டவைதான். கருணை மனுக்கள் மீதான முடிவை எடுக்கும் முன்பு அரசியல், சாதி, மதம் ஆகியவற்றின்அடிப்படையில் முடிவுகள் எடுக்கக் கூடாது.
இந்த வழக்கில், ஆந்திர ஆளுநர் எடுத்துள்ள முடிவு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். கட்சி அடிப்படையில்இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கருத இடம் உள்ளது. இதுபோல முடிவு எடுப்பது மிகவும் தவறானதாகும், சட்டவிரோதமானதும் கூட.
அரசியல் என்ற போர்வையில் சட்டத்தின் ஆட்சியின் மாண்பைக் குறைத்து விடக் கூடாது. கருணை மனுக்கள் மீதுநடவடிக்கை எடுத்து, தண்டனையை ரத்து செய்யும்போதோ அல்லது குறைக்கும் முடிவை எடுக்கும்போதோ,பாதிக்கப்பட்டவரின் குடும்பங்களையும் ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
எனவே இதுபோல முறைகேடான முடிவுகள் எடுக்கப்பட்டால் அந்த முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முழுஅதிகாரம், உரிமையும் உள்ளது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு, நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட, குடியரசுத் தலைவரிடம்கருணை மனு தாக்கல் செய்துள்ள அப்சல் விவகாரம் குறித்து பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications