5 நாள் லீவு: அலை மோதிய குடி மகன்கள்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலையொட்டி இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு மதுக் கடைகள் மூடப்பட்டிருக்கும்என்பதால், நேற்று தமிழகத்தின் அனைத்தப் பகுதிகளிலும் டாஸ்மாக் மதுக் கடைகள் முன்பு குடிமக்கள் கூட்டம்கட்டுக்கடங்காமல் அலைமோதியது.
தமிழகத்தில் வருகிற 13 மற்றும் 15 ஆகிய இரு நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. நேற்றுடன்முதல் கட்டப் பிரசாரம் முடிவடைந்தது. 13ம் தேதி மாலை 2வது கட்டப் பிரசாரம் முடிவடைகிறது.நேற்று மாலை முதல் 16ம் தேதி மாலை வரை மதுக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.இதனால் 5 நாட்களுக்கு தொடர்ந்து மதுக் கடைகள் இருக்காது என்பதால் மதுப் பிரியர்கள் பெரும்தர்மசங்கடத்திற்கு ஆளானார்கள்.
தினசரி அடிப்பவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. எனவே முன் கூட்டியே சரக்கை வாங்கிவைத்துக் கொள்வதற்காக நேற்று காலை முதலே டாஸ்மாக் கடைகளை அவர்கள் முற்றுகையிட்டனர்.
தலைநகர் சென்னையில், தமிழக அரசின் டாஸ்மாக் கடைகள் முன்பு பெரும் கூட்டம் அலைமோதியது.காலையிலேயே ஆயிரக்கணக்கானோர் கடைகளைத் தேடி வந்து விட்டதால் சரக்கை கொடுத்து மாள முடியாமல்டாஸ்மாக் ஊழியர்கள் திணறினர்.
குவார்ட்டர், ஆஃப், ஃபுல் என தங்களது சத்துக்குத் தகுந்த சரக்குகளை வாங்கியபடி சந்தோஷமாக வீட்டைப்பார்த்து நடந்தனர் குடிமக்கள்.
ஐந்து நாள் கடை மூடலை சாதகமாக்கிக் கொண்ட பலர் பிளாக்கில் பாட்டில்களை வாங்கி பதுக்கி வருகின்றனர்.சென்னை குரோம்பேட்டையில் 480 ரம், பிராந்தி பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸார் கைதுசெய்தனர்.
இதேபோல மேலும் இருவரையும் தாம்பரம் பகுதியில் போலீஸார் கைது செய்துள்ளனர். மது பாட்டில்களைமொத்தமாக வாங்குவதும் தடை செய்யப்பட்டிருப்பதாகவும், அதுபோல செய்பவர்கள் கடுமையாகதண்டிக்கப்படுவார்கள் எனவும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
இதே நிலைதான் தமிழகம் முழுவதும் உள்ள மதுக் கடைகளிலும் நிலவியது. காலை முதலே ஆயிரக்கணக்கானகுடிமக்கள் பாட்டில் வாங்க குவிந்ததால் பல இடங்களில் போலீஸார் தலையிட்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்தி,வரிசையில் நிறுத்தி, வாங்க வைத்து சந்தோஷமாக வழியனுப்பி வைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications