ஹரியானாவில் ஒரு நீயா!
ஹன்சி (ஹரியானா):
நீயா படத்தில் வருவதைப் போல பாம்புகளால் கடந்த பத்து ஆண்டுகளாக துரத்தப்படும் ஹரியானாவைச் சேர்ந்தஒரு நபர், பாம்புகளிடமிருந்து தப்பிக்க இரும்புக் கூண்டை அமைத்து அதற்குள் வாழ்க்கையை தள்ளி வருகிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபிரியா, கமல்ஹாசன் ஆகியோர் நடித்து வெளியான நீயா படத்தை யாரும்மறந்திருக்க முடியாது. தனது ஜோடியை கொன்ற கமல் உள்ளிட்ட நான்கு நண்பர்களை, பெண் பாம்பு மனிதரூபம் எடுத்து விரட்டி விரட்டி பழி வாங்கும். பழிவாங்கும் பாம்பாக ஸ்ரீபிரியா நடித்திருப்பார்.இதே போன்ற ஒரு விரட்டல் கதை ஹரியானா மாநிலம் ஹன்சி என்ற கிராமத்தில் நடந்துள்ளது. இந்தகிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதாகும் சாந்த் ராம் சைனி என்ற விவசாயி. இவரை கடந்த 10 ஆண்டுகளாகபாம்புகள் துரத்தி வருகின்றனவாம். இதுவரை மொத்தம் 22 பாம்புகள் சைனியை கடித்துள்ளன. தன்னைக் கடிக்கவந்த 30 பாம்புகளை சைனி அடித்துக் கொன்றுள்ளாராம்.
தொடர்ந்து பாம்புகள் தன்னைக் கொல்ல துரத்தி வருவதால் பீதியடைந்துள்ள சைனி, பாம்புகளிடமிருந்து தப்பிக்கஒரு கூண்டை அமைத்து, அதற்குள்ளேயே வாழ்க்கை நடத்தி வருகிறார். பெரிய இரும்புக் கூண்டைஅமைத்துள்ள சைனி, மாலை வந்ததும் அந்த கூண்டுக்குள் போய் அடைந்து கொள்கிறார்.
அடுத்த நாள் சூரியோதயம் வரை அவர் கூண்டை விட்டு வெளியே வருவதில்லை. ஏன் இப்படி ஒரு அவல நிலைஎன்று சைனியிடம் கேட்டபோது, கடந்த 10 ஆண்டுகளாகவே பாம்புகள் என்னை துரத்தி வருகின்றன.
10 ஆண்டுகளுக்கு முன்பு நான் வயல் வேலைக்காக போய்க் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பாம்பு என்னைதுரத்தியது. நான் பயந்து போய் வீட்டுக்கு ஓடி விட்டேன். அடுத்த நாள் காலை வெளியே வந்தபோது அந்தபாம்பு எனது வீட்டுக்கு அருகே இருந்த மரத்திற்குக் கீழே படுத்துக் கிடந்தது.
உடனடியாக ஒரு கம்பை எடுத்து அந்தப் பாம்பை அடித்துக் கொன்று விட்டேன். அன்று ஆரம்பித்தது பிரச்சினை.அன்று முதல் தினசரி என்னை பாம்புகள் துரத்தி வருகின்றன. அது எந்த நேரமாக இருந்தாலும் சரி, ஏதாவது ஒருபாம்பு என்னை துரத்துகிறது. இதனால் வாழ்க்கை எனக்கு நரகமாகி விட்டது.
அந்த சம்பவத்திற்கு முன்பு வரை நான் ஒரு குட்டிப் பாம்பைக் கூட கொன்றதில்லை. ஆனால் ஒரு பாம்பைக்கொல்லப் போய் இப்போது பாம்புக் கூட்டமே என்னை துரத்தி வருகிறது. ஏன் பாம்புகள் என்னைக் கொல்லத்துடிக்கின்றன என்று எனக்குத் தெரியவில்லை என்று புலம்புகிறார் சைனி.
பாம்பிடமிருந்து தப்பிக்க இரும்புக் கூண்டுக்குள் வாழும் தனது கணவரைப் பார்த்து சைனியின் மனைவி தினசரிகண்ணீர் வடிக்கிறாராம். பாம்பு பீதியால் சைனி முன்பு போல வெளியே சென்று வேலை பார்ப்பதில்லையாம்.மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் எப்போதாவதுதான் வேலைக்குப் போகிறாராம்.
இதனால் சைனியின் மனைவிதான் சிறு சிறு வேலைகளை செய்து தனது கணவரையும், இரு மகன்கள், இருமகள்களையும் காப்பாற்றி வருகிறாராம்.
சைனியைத் துரத்தும் பாம்பு அவரது குடும்பத்தினரை ஒன்றும் செய்வதில்லை என்பதுதான் வேதனையிலும் ஒருநிம்மதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications